இயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AntanO சி c |
imported>Sukanthi "முத்தமிழில் <ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0611/html/d061161.htm முத்தமிழ்]</ref> இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
09:53, 22 மே 2024 இல் கடைசித் திருத்தம்
முத்தமிழில் [1] இயற்றமிழ். இயல் என்னும் தமிழ். இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம்.
தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது. மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும், எழுதப்படும் செய்யுளும் அடக்கம் என்கிறது. இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன.
இவற்றைச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் என அது குறிப்பிடுகிறது. செந்தமிழ் இயற்கை என்பது இயல்.