மருட்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sengai Podhuvan No edit summary |
imported>Sukanthi "'''மருட்பா''' என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. இது என்ன பாடல் என்று மருள வைப்பது மருட்பா. <ref>மருட்பா ஏனை இரு சார் அல்லது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:36, 22 மே 2024 இல் கடைசித் திருத்தம்
மருட்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. இது என்ன பாடல் என்று மருள வைப்பது மருட்பா. [1] வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது மருட்பா எனப்படும். மருட்பா வகைகள்
- சமநிலை மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமநிலையில் கலந்திருப்பது
- வியனிலை மருட்பா - வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பது.
- சமனிலை மருட்பா எடுத்துக்காட்டு
திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலனும் சேவடி எய்தும் - அரிபரந்த
போகுஇதழ் உண்கண் இமைக்கும்
ஆகும் மற்றிவள் அகலிடத்து அணங்கே[2]
- வியனிலை மருட்பா எடுத்துக்காட்டு
பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே
விளக்கம்
கங்கை யமுனை ஆறுகள் சேர்வது போலவும் சங்கர யாராயணர் சட்டகக் கல்வி போலவும் வெண்பாவும் ஆசிரியப்பாவும் விராவி நிற்பது மருட்பா [3]
மேற்கோள்கள்
- ↑ மருட்பா ஏனை இரு சார் அல்லது \ தான் இது என்னும் தனிநிலை இன்றே. (தொல்காப்பியம் - செய்யுளியல் 81)
- ↑ புறப்பொருள் வெண்பாமாலை - கைக்கிளை - 3
- ↑ யாப்பருங்கல விருத்தி, பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 171