2,4-சைலிடின்
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2,4-டைமெத்தில்பென்சீன்-1-அமீன்
| |
| வேறு பெயர்கள்
2,4-டைமெத்திலமீன், 2,4-டைமெத்தில்பீனைலமீன், 2,4-டைமெத்தில்பென்சீனமைன்
| |
| இனங்காட்டிகள் | |
| 95-68-1 | |
| ChEBI | CHEBI:27840 |
| ChemSpider | 6980 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C8H11N | |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.9763 |
| உருகுநிலை | −15.9 °C (3.4 °F; 257.2 K) |
| கொதிநிலை | 218.0 °C (424.4 °F; 491.1 K) |
| low | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 100 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2,4-சைலிடின் (2,4-Xylidine ) என்பது C8H11N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அனிலின் வழிப்பொருளான இச்சேர்மத்தின் கட்டமைப்பு (CH3)2C6H3NH2 என்று எழுதப்படுகிறது. 2,6-சைலிடின் மற்றும் 3,4-சைலிடின் சேர்மங்களின் மாற்று வடிவம் 2,4-சைலிடின் ஆகும். தூயநிலையில் நிறமற்ற திரவமாக 2,4-சைலிடின் உள்ளது.
தயாரிப்பு மற்றும் வினைகள்
மெட்டா சைலின் சேர்மத்தை நைட்ரோ ஏற்றம் (−NO2 ) செய்து தொடர்ந்து விளையும் நைட்ரோ அரோமாட்டிக்கை ஐதரசனேற்றம் செய்வதன் மூலமாக 2,4 சைலிடின் தயாரிக்கப்படுகிறது. வர்த்தகமுறையில் முக்கியத்துவம் மிக்க கால்நடை மருந்தான சிமியசோல் மற்றும் நிறமி மஞ்சள் 81 போன்றவை 2,4-சைலிடின் வழிபொருட்களாகும்[1].
மேற்கோள்கள்
- ↑ M. Meyer "Xylidines" in Ullmann's Encylclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a28_455