1978 விழுப்புரம் கொடூரம்
வார்ப்புரு:தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை 1978 விழுப்புரம் வன்கொடுமை (1978 Villupuram atrocity) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் 1978 சூலையில் நடந்த சாதி அடிப்படையிலான வன்முறை நிகழ்வு ஆகும். இந்த வன்முறையில் தலித் மக்கள் வசிக்கும் பெரியபறைச்சேரியில் 12 தலித்துகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் எரிக்கப்பட்டன. ஆதிக்க சாதி ஆணொருவன் தலித் பெண்ணைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவன் மற்ற தலித்துகளுடன் சேர்ந்து ஆதிக்க சாதி ஆணைத் தாக்கியதாகவும் முதல் நாள் புகார் கூறப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. ஆதிக்க சாதியினர் ஏவு வானவெடிகளால் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதுடன் தீ வைப்பு, தாக்குதல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர். தலித்துகளும் பல ஆதிக்க சாதியினரின் வீடுகளுக்கு தீ வைத்து பழிவாங்கினார்கள்.
இந்த வழக்கில் முப்பத்தி நான்கு சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டனர், 3 பேருக்கு மரண தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.