1970 போலா புயல்

தமிழர்விக்கி இல் இருந்து
(1970 போலா சூறாவளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

1970 போலா புயல், 1970 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்றைய கிழக்கு பாக்கிஸ்தான் பகுதிகள் (தற்போது பங்களாதேஷ்) மற்றும் இந்தியாவின் மேற்கு வங்கத்தைத் தாக்கிய பேரழிவுகரமான சூறாவளி ஆகும்.[1]

சூறாவளி

போலா சூறாவளி 1970 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவத்தின் ஆறாவது சூறாவளி புயலாக உருவெடுத்தது. இப்பருவத்தின் வலுவான சூறாவளியாக இருந்தது. நவம்பர் 8 ம் தேதி வங்கக் கடலின் மத்திய கடலோரப்பகுதியில் சூறாவளி உருவானது. இச்சூறாவளி வடக்கில் பயணித்து, பின் தீவிரமடைந்தது. இது நவம்பர் 11 ம் தேதி காற்றின் உச்சநிலை வேகத்தில் 185 கிமீ / மணி (115 மைல்) எனும் வேகத்தை அடைந்தது.

சேதங்கள்

போலா சூறாவளி, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வெப்பமண்டல சூறாவளி மற்றும் மிக பயங்கரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்று. புயலில், 500,000 மக்கள் வரை உயிரிழந்தனர்[2], முக்கியமாக கங்கை டெல்டா தீவுகளில் பெருக்கெடுத்த வெள்ளம், இப்புயல் காரணமாக ஏற்பட்டது.

இப்புயலின் எழுச்சி பல கடல் தீவுகளை பேரழிவிற்கு உட்படுத்தியது, கிராமங்களை முற்றிலுமாக துடைத்து, இப்பகுதி முழுவதும் பயிர்களை அழித்துவிட்டது.மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில், தசூமுதின் அதன் மக்கள் தொகையில் 45% க்கும் அதிகமானோரை புயல் மூலம் இழந்தது. பின் அன்றைய தினத்தில் மதிய நேரத்தில் போலா சூறாவளி வலு இழந்து, கிழக்கு பாகிஸ்தானின் (இப்போது பங்களாதேஷ்) கரையோரத்தில் கரையைக் கடந்தது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=1970_போலா_புயல்&oldid=146794" இருந்து மீள்விக்கப்பட்டது