1,1'-பெரோசினிருகார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள் | |
---|---|
1293-87-4 | |
பப்கெம் | 16211180 |
பண்புகள் | |
C12H10FeO4 | |
வாய்ப்பாட்டு எடை | 274.05 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற திண்மம் |
அடர்த்தி | 1.769 கி/செ.மீ3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,1'-பெரோசீனிருகார்பாக்சிலிக் அமிலம் (1,1'-Ferrocenedicarboxylic acid) என்பது Fe(C5H4CO2H)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம இரும்பு சேர்மமாகும். பெரோசீனின் மிக எளிய இருகார்பாக்சிலிக் அமில வழிப்பெறுதியாக இது கருதப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் திண்மப்பொருளாகக் காணப்படும் இச்சேர்மம் நீரிய காரத்தில் கரைகிறது. 1,1'-பெரோசீனிருகார்பாக்சிலிக் அமிலத்தின் பெயரிலுள்ள 1,1' பகுதி தனித்தனி வளையங்களில் கார்பாக்சிலிக் அமிலக் குழுக்களின் இருப்பிடத்தைக் குறிக்கிறது.
தயாரிப்பு
ஈரெசுத்தர்களான Fe(C5H4CO2R)2 (R = மெத்தில், எத்தில்) சேர்மத்தை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் 1,1'-பெரோசீன்யிருகார்பாக்சிலிக்கு அமிலத்தைத் தயாரிக்கலாம். இந்த ஈரெசுத்தரை வளையபெண்டாடையீனைட்டின் (C5H4CO2R)- கார்பாக்சியெசுத்தரின் சோடியம் உப்புடன் இரும்பு குளோரைடு உப்பைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரித்துக் கொள்ளலாம்.
பயன்கள்
பெரோசீன் ஈரமிலகுளோரைடு, பெரோசீன் ஈரைசோசயனேட்டு, பெரோசீன் ஈரமைடு, பெரோசீன் ஈரமீன் போன்ற வழிப்பெறுதிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக 1,1'-பெரோசீன்யிருகார்பாக்சிலிக்கு அமிலம் பயன்படுகிறது. இவற்றின் வாய்பாடுகள் முறையே, Fe(C5H4COCl)2, Fe(C5H4NCO)2, Fe(C5H4CONH2)2, மற்றும் Fe(C5H4NH2) என்பனவாகும்.[2]
1,1'-பெரோசீன்யிருகார்பாக்சிலிக்கு அமிலத்தின் வழிப்பெறுதிகள் சில ஆக்சிசனேற்ற ஒடுக்க மூலக்கூற்று கருவிகளிலும், சில ஆக்சிசனேற்ற ஒடுக்க மேற்பூச்சுகளிலும் உட்கூறுகளாக உள்ளன. [3][4]
தொடர்புடைய சேர்மம்
பெரோசீன்கார்பாக்சிலிக்கு அமிலம்
மேற்கோள்கள்
- ↑ Takusagawa, F.; Koetzle, T. F. (1979). "The crystal and molecular structure of 1,1'-ferrocenedicarboxylic acid (Triclinic modification): Neutron and X-ray diffraction studies at 78 K and 298 K". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 35 (12): 2888–2896. doi:10.1107/S0567740879010906.
- ↑ Petrov, Alex R.; Jess, Kristof; Freytag, Matthias; Jones, Peter G.; Tamm, Matthias (2013). "Large-Scale Preparation of 1,1′-Ferrocenedicarboxylic Acid, a Key Compound for the Synthesis of 1,1′-Disubstituted Ferrocene Derivatives". Organometallics 32 (20): 5946–5954. doi:10.1021/om4004972.
- ↑ Donley, Carrie; Dunphy, Darren; Paine, David; Carter, Chet; Nebesny, Ken; Lee, Paul; Alloway, Dana; Armstrong, Neal R. (2002). "Characterization of Indium−Tin Oxide Interfaces Using X-ray Photoelectron Spectroscopy and Redox Processes of a Chemisorbed Probe Molecule: Effect of Surface Pretreatment Conditions". Langmuir 18 (2): 450–457. doi:10.1021/la011101t.
- ↑ Orlowski, G. A.; Kraatz, H. B. (2006). "Peptide Films on Surfaces: Preparation and Electron Transfer". Metal-Containing and Metallosupramolecular Polymers and Materials. ACS Symposium Series. Vol. 928. pp. 392–400. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/bk-2006-0928.ch027. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780841239296.