வ உ சி பூங்கா, ஈரோடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வ.உ.சிதம்பரனார் பூங்கா அல்லது வ.உ.சி. பூங்கா என்றழைக்கப்படும் பூங்காவானது, தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் அமைந்துள்ளது. இப்பூங்கா வளாகத்தில், பூங்கா மட்டுமின்றி, விளையாட்டு மைதானம், உள்விளையாட்டரங்கம், காலியிடம், ஆஞ்சநேயர் கோவில், அரசு அருங்காட்சியகம், சிறுவர் விளையாட்டரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. பத்திருபது ஆண்டுகளுக்கு முன், இங்கு வனவிலங்கு காட்சி சாலையும், சிறுவர்கள் பயணிக்கக்கூடிய தொடர்வண்டியும் இருந்தது, தற்போது இவை இல்லை. ஆண்டுதோறும் ஈரோடு புத்தகத் திருவிழா, வட்டரங்கு[1], விடுதலை நாள் விழா உள்ளிட்டவை[2][3], வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறும்.

பூங்கா

பத்திருபது ஆண்டுகளுக்கு முன் வனவிலங்கு காட்சி சாலை[4], சிறுவர்கள் பயணிக்கக்கூடிய தொடர்வண்டி என பல்வேறு கேளிக்கைகளைக் கொண்டிருந்த இப்பூங்கா தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. வெறும் மரங்களும்[5], செடிகளும் மட்டுமே உள்ள இப்பூங்காவிற்கு காணும் பொங்கலன்று பெண்கள், குழந்தைகள் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.

விளையாட்டு மைதானம்

வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நினைவாக, இங்கு ஒரு கால்பந்தாட்ட மைதானம் உள்ளது. இவ்வளாகம், ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தின் விளையாட்டு வளர்ச்சித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

உள்விளையாட்டரங்கம்

இங்கு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் வசதிகள் உள்ளன.[6]

ஆஞ்சநேயர் கோவில்

ஈரோடு மாருதி ஆஞ்சநேயர் கோவில் இப்பூங்காவில் அமைந்துள்ளது. சனிக்கிழமை தோறும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகிறது.

அரசு அருங்காட்சியகம்

ஈரோடு அரசு அருங்காட்சியகம், பூங்காவின் வாயிலில், விளையாட்டு மைதானத்திற்கு அடுத்துள்ளது. இங்கு பல்வேறு கல்வெட்டுகளும், மண்பாண்டங்களும், சில சிற்பங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சிறுவர் விளையாட்டரங்கம்

சிறுவர்களுக்கு எனத் தனியாக விளையாட்டரங்கம் உள்ளது. இது ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிர்திசையில் அமைந்துள்ளது.

நீச்சல் குளம்

நீச்சல் பயிற்சி மற்றும் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி நீச்சல் செய்வதற்காகவும், நீச்சல்குளமும் இங்கு உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வ_உ_சி_பூங்கா,_ஈரோடு&oldid=40248" இருந்து மீள்விக்கப்பட்டது