விஜய் ஆதிராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விஜய் ஆதிராஜ்
Vijay Adhiraj
Vijay Adhiraj.JPG
பிறப்பு18 ஏப்ரல்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர், நடனக் கலைஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சுழல், கணேஷ் – வசந்த், சித்தி, மனைவி
வாழ்க்கைத்
துணை
ராஷ்னா
பிள்ளைகள்2

விஜய் ஆதிராஜ் (Vijay Adhiraj) தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் தூர்தர்ஷன் தயாரித்த சகஸ்ரபாணி என்ற இந்திப்படத்தின் மூலம் அறிமுகமானார். மறைந்த இந்தியப் பிரதமர் திரு. பி. வி. நரசிம்ம ராவ் இப்படத்தின் கதையை எழுதியிருந்தார். இப்படத்தை தேசிய விருது பெற்ற கன்னட இயக்குனர் டி. எஸ். நாகபரணா இயக்கியிருந்தார்.

தொழில் வாழ்க்கை

விஜய் ஆதிராஜ் பொண்ணு வீட்டுக்காரன், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு முன்பு, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அறிமுகமானார். 2000கள் முழுவதும், இவர் ஒரு நிறுவப்பட்ட தொலைக்காட்சி மற்றும் நேரடி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார்.[1]

இவரது தந்தை மறைந்த ஆனந்த் மோகன் எழுதி இயக்கிய சுழல் படம் இவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து ஏ. வி. எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ். பி. முத்துராமன் இயக்கிய நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடர் சன் தொலைக்காட்சியில் வெளியானது. எழுத்தாளர் சுஜாதா எழுதிய, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், சுஹாசினி இயக்கத்தில் கணேஷ் – வசந்த் என்ற படத்தில் ஒரு நடிகராக இவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் மீடியாவொர்க்ஸ் தயாரித்த சித்தி என்ற தொலைக்காட்சி தொடர் இவருக்கு புகழை ஈட்டியது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் தனது மனைவி ராஷ்னாவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[2][3]

அதன்பிறகு சத்யா, ஜெகபதி பாபு மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான புத்தகம் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு 1998 லேயே திரைக்கதையை எழுதி தயாராக இருந்தார். ஆனால் கிரேசி மோகன் உள்ளிட்ட இவரது சகாக்களால் சிறுதுகாலம் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டார்.[4] இந்த படம் ஜனவரி 2013 இல் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விஜய்_ஆதிராஜ்&oldid=21267" இருந்து மீள்விக்கப்பட்டது