விஜயரகுநாத தொண்டைமான்

தமிழர்விக்கி இல் இருந்து
(விஜயரகுநாத தொண்டமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விஜயரகுநாத தொண்டைமான்
புதுக்கோட்டை அரசர்
ஆட்சிக்காலம்30 திசம்பர் 1789 – 1 பெப்ரவரி 1807
முன்னையவர்இராயரகுநாத தொண்டைமான்
பின்னையவர்இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான்
பிறப்புமே 1759
புதுக்கோட்டை சமஸ்தானம், புதுக்கோட்டை
இறப்பு1 பெப்ரவரி 1807 (வயது 47)
புதுக்கோட்டை
மரபுபுதுக்கோட்டை
தந்தைதிருமலைராய தொண்டைமான்

இராஜா விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை 1789 முதல் 1807 பெப்ரவரி முதல்தேதி வரை வரை ஆண்ட மன்னர் ஆவார்.[1]

துவக்க வாழ்க்கை

விஜய ரகுநாத தொண்டைமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டைமான் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.[2]

ஆட்சி

இராயரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார். விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலாஜா இவருக்கு "ராஜா பகதூர்" என்ற பட்டத்தை வழங்கினார்.[2] பாளையக்காரர் போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார்.[2] இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர்.[2]

தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன. 1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.

குடும்பம்

விஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார்.[2] விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர்.

இறப்பு

விஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளைய ராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் உடன் கட்டை ஏறினார்.[2]

மேற்கோள்கள்

  1. "Indian Princely States K-Z". Ben Cahoon. 2000.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Pudukkottai 2". Tondaiman Dynasty. Christopher Buyers.
"https://tamilar.wiki/index.php?title=விஜயரகுநாத_தொண்டைமான்&oldid=130848" இருந்து மீள்விக்கப்பட்டது