வல்லப சித்தர்

வல்லப சித்தர் என்பவர் ஒரு சித்தராவார். இவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மதுரைக்கு அருகேயுள்ள திருப்புவனம் எனும் ஊரில் வாழ்ந்து வந்த பொன்னனையாள் எனும் பெண்மணிக்கு இவர் உதவியுள்ளார்.[1]

வல்லப சித்தர்
தேசியம்இந்தியர்

பொன்னனையாள் திருப்புவனத்தில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள சிவாலயத்தின் மூலவர் பூவனநாதரை லிங்கரூபம் அல்லாது உற்சவர் கோலத்தில் சிலைவடிக்க ஆசைப்பட்டார். அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு வருவோர்களுக்கு அன்னதானம் அளிக்கும் பணி்யை செய்துவந்தார். ஒரு நாள் அன்னதானம் ஏற்க வந்த கூட்டத்தினரில் ஒருவர் மட்டும் ஏதும் உண்ணாது இருப்பதை அறிந்தார். அந்த மனிதரிடம் ஏன் உணவினை ஏற்கவில்லை என வினாவினார். உணவிடும் நபர்கள் கவலையில் இருந்தால் தான் அன்னதானத்தினை ஏற்க முடியாது எனவும், என்ன காரணத்தினால் இவ்வாறு சோகமாக உள்ளீர்கள் எனவும் அவர் வினாவினார்.

பூவனநாதரை உருவத்தில் வழிபட சிலையமைக்க இயலவில்லை என பொன்னனையாள் தெரிவித்தார். அதற்கு சித்தர் அவரிடமுள்ள பாத்திரங்களை அன்றிரவு நெருப்பில் போட்டால், அந்த பாத்திரங்களின் எடையில் பாதியாக தங்கம் கிடைக்குமென கூறினார். அதற்காக பாத்திரங்களில் திருநீற்றினை இட்டார். அந்த சித்தர் சொன்னத்தைப் போல நெருப்பில் இட்டு பாதியாக கிடைத்த தங்கத்தை வைத்து பூவனநாதரின் தங்க சிலையை பொன்னனையாள் உருவாக்கினார். அந்தச் சித்தரை காண மதுரைக்கு சென்றார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ள துர்க்கை சன்னிதிக்கு அருகே இந்த வல்லப சித்தருக்கு சன்னதியுள்ளது.[2]

ஆதாரங்கள்

  1. தாதிக்கு அருளிய தயாபரர் - தீபம் இதழ் ஜீலை 20 2016 பக்கம் 56
  2. தாதிக்கு அருளிய தயாபரர் - தீபம் இதழ் ஜீலை 20 2016 பக்கம் 58
"https://tamilar.wiki/index.php?title=வல்லப_சித்தர்&oldid=27991" இருந்து மீள்விக்கப்பட்டது