வனிதா ரங்கராஜு ரமணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வனிதா ரங்கராஜு-ரமணன் (Vanitha Rangaraju-Ramanan) ஓர் இந்திய அசைவூட்ட கலைஞர். ஷ்ரெக் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதெமி விருது பெற்ற குழுவில் ஒளி நுட்ப இயக்குனராக பங்காற்றியவர்.

துவக்க வாழ்க்கை மற்றும் பணிவாழ்வு

வனிதா தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சியில் 1970ஆம் ஆண்டு பிறந்தவர். அங்கு பள்ளிப்படிப்பிற்குப் பிறகு தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சியில் வடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.1996ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் பட்டமேற்படிப்பு மேற்கொண்டார்.அவ்வாறு படிக்கையில் ஓய்வுநேர பணியாக 1998ஆம் ஆண்டு இன்டஸ்ட்ரியல் லைட் & மாஜிக் என்ற நிறுவனத்தில் பயிற்சியாளராக பணி புரிந்தார்.பின்னர் படிப்பை தொடராது அந்நிறுவனத்திலேயே சேர்ந்து அசைவூட்டப் படங்களில் பணியாற்றத் துவங்கினார்.

ஆஸ்கார்

இந்தியனின் ஆஸ்கார் கனவை நனவாக்கியுள்ள தமிழக மங்கை ரங்கராஜு ரமணன். இவரது பள்ளி நாட்கள் திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியிலும், புனித வளனார் மெட்ரிக் பள்ளியிலும் நகர்ந்தன. திருச்சி மண்டலப் பொறியியற் கல்லூரியில் பி.ஆர்க் பட்டப்படிப்பை முடித்தார். டாய் ஸ்டோரியைப் (Toy Story) பற்றிய கருத்துப்படம் ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்த போது அனிமேசன் என்பது ஓவியக்கலைஞர்களை மட்டும் சார்ந்ததல்ல. பல்வேறுதுறையினரின் பங்களிப்பும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டார். இதன்பின் அனிமேசன் துறையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இவருக்கு எழுந்துள்ளது. 1996ல் ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் அனிமேசன் மாஸ்டர்ஸ் புரோக்ராம் படிப்பை முடித்த பின் ஐஎல்எம் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பெற்றதைத் தன்வாழ்வின் திருப்புமுனையாகக் கருதும் இவர், பசிபிக் டேட்டா இமேஜஸ் (Pacific Data Images) நிறுவனத்தில் வேலை கிடைத்தது குறித்தும் பெருமை கொள்கிறார்.

பிடிஐ ட்ரீம்ஒர்க்ஸ் நிறுவனத்தின் படைப்பான ஷ்ரெக்1 திரைப்படத்திற்காக 2002 ஆம் ஆண்டின் சிறந்த லைட் டெக்னிக்கல் டைரக்டருக்கான ஆஸ்கார் விருதையும் வென்று கனவு மங்கையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்போது வெளியிடப் படவிருக்கும் ஷ்ரெக்2 திரைப்படத்திலும் அதே பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவர் தனது பிடிஐ குழுவினருடன் இணைந்து தயாரித்துள்ள ஸ்ப்ரவுட் (Sprout) ஐரோப்பிய அனிமேசன் திரைவிருதை வென்றுள்ளது. சுயமாகக் குறும்படங்களைத் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

தனது வெற்றிக்குக் காரணமாக இவர் குறிப்பிடும் மூன்று விசயங்கள் பெற்றோரின் ஆதரவு, கடின உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம். இவர் இன்னும் அமெரிக்க குடியுரிமை பெறவில்லை என்பதுதான் ப்ளாஷ்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வனிதா_ரங்கராஜு_ரமணன்&oldid=23714" இருந்து மீள்விக்கப்பட்டது