லீலாவதி கோவிந்தசாமி

டத்தோ லீலாவதி கோவிந்தசாமி (ஆங்கிலம்: G. Leela Rama; மலாய்: Leelavathi Govindasamy; சீனம்: 利拉瓦蒂 文达沙米); 6 ஆகத்து 1944 - 9 மார்ச் 2017) என்பவர் 1995 முதல் 1999 வரை மலேசிய நாடாளுமன்றத்தின், சிலாங்கூர் காப்பார் தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்த மலேசிய அரசியல்வாதி ஆகும்.

மாண்புமிகு டத்தோ
லீலாவதி கோவிந்தசாமி
Yang Berbahagia
Datuk Leelavathi Govindasamy

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
Leela govindasamy datukship honor.jpg
சிலாங்கூர் காப்பார் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1995–1999
முன்னவர் எம். மகாலிங்கம் (மஇகா-பாரிசான்)
பின்வந்தவர் கோமளா தேவி பெருமாள் (மஇகா-பாரிசான்)
பெரும்பான்மை 18,759 (1995)
தனிநபர் தகவல்
பிறப்பு 6 ஆகத்து 1944
இறப்பு மார்ச்சு 9, 2017(2017-03-09) (அகவை 72)
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ராமசாமி முனியாண்டி
பிள்ளைகள் 2
கல்வி மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி, பிரிக்பீல்ட்சு, மலேசியா;

குயின் மேரி கல்லூரி கோயம்புத்தூர், இந்தியா

படித்த கல்வி நிறுவனங்கள் கோவை மருத்துவக் கல்லூரி
பணி அரசியல்வாதி
தொழில் மருத்துவர்

பாரிசான் நேசனல் கூட்டணியின் (Barisan Nasional) (BN) உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress) (MIC) கட்சியின் சார்பில் 1995-ஆம் ஆண்டு மலேசியாவின் 9-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசிய இந்தியப் பெண்மணி (First Malaysian Indian Lady) எனும் பெருமை இவரைச் சேர்கின்றது. அந்தத் தேர்தலில் இவர் 18,759 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[1]

பொது

டத்தோ லீலாவதி, 1944-இல், மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தவர். ஆறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. இவரின் தந்தையார் கோவிந்தசாமி குப்புசாமி; தஞ்சை மாவட்டம் திருவள்ளூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

லீலாவதியின் தந்தையார் அப்போதைய மலாயாவில் ஆசிரியர்; காவல் துறை எழுத்தர்; மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணி பிரிந்தவர். தாயார் குப்பம்மாள் ரெங்கசாமி. நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் பகுதியைச் சேர்ந்தவர்.

கோவை மருத்துவக் கல்லூரி

டத்தோ ஜி. லீலாவதி தன் தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சு, மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் (Methodist Girls School Brickfields) பெற்றார்.[2] சென்னை குயின் மேரி கல்லூரியில் (Queen Mary's College, Madras), விலங்கியல் துறையில் (Bachelor of Science, Zoology) தன் இளங்கலை கல்வியைத் தொடர்ந்தார்.[3]

செப்டம்பர் 1974-இல் தமிழ்நாடு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார். மலேசியாவிற்குத் திரும்பிய லீலாவதி சமூகச் சேவைகளில் ஈடுபட்டார். பின்னர் அரசியலிலும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனை

பின்னர் 1978 நவம்பர் 11-இல், கோலாலம்பூர் பாண்டான் ம.இ.கா. கிளையின் தலைவராக இருந்த ராமசாமி முனியாண்டி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்மிளா ராமசாமி மற்றும் பிரீவீன் ராம் ராமசாமி என இரண்டு குழந்தைகள்; மற்றும் 3 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

30 டிசம்பர் 1975-இல், டத்தோ லீலாவதி கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக (Kuala Lumpur General Hospital Medical Officer) பணியாற்றத் தொடங்கினார். சில ஆண்டுகள் அரசாங்கத்தில் பணிபுரிந்த பின்னர், 1983-ஆம் ஆண்டு, செராஸ் தாமான் மலூரியில் தன் சொந்த மருத்துவமனையை (Klinik Leela, Taman Maluri, Cheras) தோற்றுவித்துப் பணிபுரிந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை

விருதுகள்

மலேசிய விருதுகள்

  மலேசியா

இந்திய விருது

  இந்தியா

இறப்பு

டத்தோ லீலாவதி, 2017 மார்ச் 9-ஆம் தேதி, தன் 72-ஆவது வயதில் உயிர் நீத்தார். அவரின் இறப்புச் செய்திக்கு மலேசியா மற்றும் இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மலேசியாவில் அவரின் இறுதிச் சடங்கில் மலேசிய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவரின் உடல் 2017 மார்ச் 10-ஆம் தேதி, செராஸ், குவாரி மின்சுடலையில் (Cheras Kuari Crematorium) தகனம் செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. Parlimen.gov.my. 2021. Official Portal of The Parliament of Malaysia - Members. [online] Available at: <https://www.parlimen.gov.my/ahli-dewan.html?&uweb=dr&arkib=yes&vol=9&lang=en> [Accessed 12 September 2021].
  2. Leaving Certificate Methodist Girls School Kuala Lumpur, Year December 1962, school no.3445
  3. Social Service League Elementary Basic School, Queens Mary College Madras-4, Year April 1965
  4. "Klinik Leela is located at 249, Jalan Mahkota, Taman Maluri, Cheras 55100 Kuala Lumpur." (in en). https://www.facebook.com/klinikleela1/?locale=ms_MY. பார்த்த நாள்: 27 April 2023. 
  5. 2016. Panglima Jasa Negara [ebook] Available at: <http://intranet.istiadat.gov.my/v5/images/DKBPP2016/3%20-%20PANGLIMA%20JASA%20NEGARA%20(PJN)%2021.02.2017.pdf> [Accessed 3 September 2021].
  6. LETCHUMANAN, A.. "Awards from Indian government for contribution". https://www.thestar.com.my/news/community/2007/02/02/awards-from-indian-government-for-contribution. 
  7. Star Cherish. 2021. Datuk Dr. G. Leela Rama - Star Cherish. [online] Available at: <https://www.starcherish.com/resources/profile/datuk-dr-g-leela-rama> [Accessed 3 September 2021].

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லீலாவதி_கோவிந்தசாமி&oldid=24098" இருந்து மீள்விக்கப்பட்டது