ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (Raame Aandalum Raavane Aandalum) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இயக்குநர் அரிசில் மூர்த்தி தனது அறிமுக இயக்கத்தில் இயக்கியிருந்த இப்படத்தை சூர்யா, ஜோதிகா ஆகியோரின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில், ரம்யா பாண்டியன், வாணி போஜன், புதுமுகம் மிதுன் மாணிக்கம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவையும், சிவன் சரவணன் படத் தொகுப்பையும் மேற்கொண்டனர்.

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்
இயக்கம்அரிசில் மூர்த்தி
தயாரிப்பு
கதைஅரிசில் மூர்த்தி
இசைகிரிஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுசுகுமார் (ஒளிப்பதிவாளர்)
படத்தொகுப்புசிவன் சரவணன்
கலையகம்2டி என்டேர்டைன்மென்ட்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடுசெப்டம்பர் 24, 2021 (2021-09-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் 24 செப்டம்பர் 2021 அன்று டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான அமேசான் பிரைம் வீடியோ வெளியானது.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

சனவரி 2021 இல், சூர்யாவின் 2 2டி என்டேர்டைன்மென்ட் பதாகையின்கீழ் தயாரிக்கப்படும் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.[2] இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குவதாகவும் கூறப்பட்டது.[3][4] அவர் "கதைக்களம் மனதுக்கு நெருக்கமானது" என்பதை வெளிப்படுத்தினார். மேலும் இது "மனித உணர்ச்சிகளைக் கையாளும் தாக்கமான அரசியல் நையாண்டி" என்றும் கூறினார்.[4] 1 பிப்ரவரி 2021இல் படபிடிப்பு தொடங்கியது. மேலும் வாணி போஜன், புதுமுகம் மிதுன் மாணிக்கத்துடன் இணைந்து படத்தில் ஒருவராக இணைந்தார்.[5] திருநெல்வேலி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து 50 நாட்களில் முடிவடைந்தது.[6]

படத்தின் ஒலிப்பதிவை பின்னணி பாடகர் கிரிஷ் மேற்கொண்டுள்ளார்.[7] படத்தின் ஒலிப்பதிவு யுகபாரதி, விவேக், செந்தில் தாஸ், வீ. மதன்குமார் ஆகியோர் எழுதிய வரிகளுடன் ஐந்து பாடல்களும், இரண்டு கருப்பொருள்கள் பாடல்களும், ஒரு கருவி இசை என எட்டு பாடல்களைக் கொண்டுள்ளது. சோனி மியூசிக் இந்தியா படத்தின் உரிமையைப் பெற்றது. ஒலிச்சுவடு 10 செப்டம்பர் 2021 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது [8]

வெளியீடு

ஆகஸ்ட் 2021 இல், சூர்யா தனது 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிக்கும் படங்கள் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் உட்பட, நேரடியாக ஸ்ட்ரீமிங் சேவையில் திரையிடப்படும் என்ற நிபந்தனையுடன் அமேசான் பிரைம் வீடியோவுடன் நான்கு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[9][10] அதில் இது முதல் படமாக இருந்தது.[11] இந்த படம் 24 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது [12]

மேற்கோள்கள்

  1. "Raame Aandalum Raavane Aandalum trailer: Suriya promises a hard-hitting political drama". The Indian Express (in English). 2021-09-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  2. "Ramya Pandian in a female centric film". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  3. "Ramya Pandian in a female centric film" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 January 2021 இம் மூலத்தில் இருந்து 23 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211023085307/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ramya-pandian-in-a-female-centric-film/articleshow/80477392.cms. 
  4. 4.0 4.1 "Suriya signs Ramya Pandian for new movie". IndiaGlitz.com. 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  5. "Vani Bhojan joins Ramya Pandian's female centric film". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  6. "Is Ramya Pandian's brother Parasu making his big-screen debut soon? here's the truth". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  7. "Krish completes composing songs for Vani Bhojan and Ramya Pandian's next film". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  8. Krish (2021-09-10), Raame Aandalum Raavane Aandalum (Original Motion Picture Soundtrack) (in English), Spotify, பார்க்கப்பட்ட நாள் 2021-10-11
  9. "Inside 2D Entertainment's four-film deal with Amazon Prime Video India: Why Suriya's productions are going digital". Firstpost. 2021-08-25. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  10. "Suriya's 2D inks four film deal with Amazon Prime Video, 'Jai Bhim' to release in Nov". The News Minute (in English). 2021-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  11. "Suriya announces four upcoming Tamil productions for Amazon Prime release". Hindustan Times (in English). 2021-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  12. "Suriya's production 'Raame Aandalum Raavane Aandalum' to release Sep 24 on Amazon Prime" (in en-IN). https://www.thehindu.com/entertainment/movies/suriyas-production-raame-aandalum-raavane-aandalum-to-release-sep-24-on-amazon-prime/article36468491.ece. 

வெளி இணைப்புகள்