யோகேஸ்வரி பற்குணராசா
யோகேஸ்வரி பற்குணராசா முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர். ஈழ மக்கள் சனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், 2009ம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைக்கான தேர்தலில் ஈழ மக்கள் சனநாயகக் கூட்டணியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றதனால் மாநகர முதல்வரானார். 2009 செப்டெம்பர் முதலாம் தேதி.[1] சபையின் 23வது முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட அவர் 2014 ஆகத்து மாதம் சபை கலைக்கப்படும் வரை பதவியில் இருந்தார்.
தொழில்
யோகேஸ்வரி ஒரு கல்வியாளர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் 28 ஆண்டுகள் பணியாற்றினார். அமைச்சுகளில் உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
- ↑ "யாழ். மாநகரசபை மேயராக திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவு". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.