மெஹ்முதா அகமது அலி ஷா

மிஸ் மெகுமுதா என்று பிரபலமாக அறியப்பட்ட மெகுமுதா அகமது அலி ஷா (Mehmooda Ahamed Ali Shah), இந்திய கல்வியாளரும், சமூக ஆர்வலரும், எம்.ஏ. சாலை ஸ்ரீநகர் பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வரும் ஆவார்.[1] இவர் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார், மேலும் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் சமூக வலுவூட்டல் குறித்து காஷ்மீர் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பணியாற்றியதாக கூறப்படுகிறது. [2]இந்திய கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2006 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த கௌரவ விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[3]

மெஹ்முதா அகமது அலி ஷா
பிறப்பு1920
சிறிநகர், ஜம்மு காஷ்மீர் இராச்சியம், இந்தியா
இறப்பு11 March 2014
சிறிநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா
கல்லறைமால்தெங் கல்லறை, சிறிநகர், ஜம்மு காஷ்மீர்
பணிகல்வியாளர்
சமூக செயல்பாட்டாளர்
அரசியல்வாதி
அறியப்படுவதுபெண்களின் கல்வி
பெற்றோர்சயீத் அகமது அலி ஷா
துல்கன் பேகம்
விருதுகள்பத்மசிறீ
நூற்றாண்டின் மிகச் சிறந்த மாணவர்

சுயசரிதை

ஸ்ரீநகரில் துல்ஹான் பேகம் மற்றும் வன அதிகாரியான சையத் அகமது அலி ஷா ஆகியோருக்கு 1920 ல் மெஹ்முதா அலி ஷா மகளாக பிறந்தார். மேலும் உள்ளூர் மிஷனரி பெண்கள் பள்ளியில் (இன்றைய மல்லின்சன் பெண்கள் பள்ளியில் ) பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் இவர். [4]அலி ஷா தம்பதியினரின் ஒரே பெண் குழந்தை இவர், இவரது மூன்று சகோதரர்களும் பின்னர் உயர் அதிகாரிகளாக மாறினர்; நசீர் அகமது, மருத்துவ கல்வியாளர் மற்றும் மருத்துவக் கல்லூரி அதிபர், சையத் அஹ்மத் ஷா, துணை காவல் ஆய்வாளர் மற்றும் மூன்றாவது, அமர்வு நீதிபதி ஜமீர் அகமது. [5] தனது உயர் படிப்புகளுக்காக லாகூருக்குச் சென்ற இவர், லாகூரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும், கல்வியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். லாகூரில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் முதுகலைப் பட்டதாரி ஆவார்.[4] இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் முதுகலை பட்டயப் படிப்பையும் செய்தார்.

கவிஞர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் முகமது இக்பாலின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு , மெஹ்முதா ஸ்ரீ நகர் திரும்பினார்.[4] அங்கு மௌசுமாவில் உள்ள ஒர் உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர், அப்போதைய மகாராஜாவால் பாரமுல்லாவில் ஒரு புதிய பள்ளி திறக்கப்பட்டபோது, இவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.[4] 1954 ஆம் ஆண்டில் எம்.ஏ. சாலை ஸ்ரீநகர் பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படும் வரை இவர் அங்கு பல ஆண்டுகள் பணியாற்றினார்.இவர் தலைமை ஆசிரியராக இருந்த காலத்திலும், பின்னர் அதிபராகவும் இருந்தபோது, உள்ளூர் பெண்களை கல்வியைத் தொடர வற்புறுத்துவதற்கும் மற்றும் ஸ்ரீநகரில் இரண்டாவது மகளிர் கல்லூரி நிறுவுவதற்கும் அவர் பணியாற்றியதாக அறியப்படுகிறது. கல்லூரியில் கலை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் இவரது முயற்சிகள் தெரிவிக்கப்படுகின்றன.[6]1975 ஆம் ஆண்டில், இவர் கல்லூரியில் தன் பணியிலிருந்து விலகிக் கொண்டார். இந்திரா காந்தியுடனான அவரது தொடர்பால் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளில் ஈடுபட டெல்லிக்குச் சென்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இவர் கட்சியில் பணியாற்றினார், ஆனால் 1984 ல் இந்திரா காந்தி இறந்த பின்னர் ஸ்ரீநகருக்குத் திரும்பினார், ஆனால் இவர் அகில இந்திய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்தார். 1987 முதல் 1990 வரை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[7]

இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் நான்காவது சிறந்த விருதான பத்ம ஸ்ரீ விருதை இவருக்கு வழங்கியது. 2012 ஆம் ஆண்டில், மல்லின்சன் பெண்கள் பள்ளி நூற்றாண்டின் மிகச் சிறந்த மாணவராக கவுரவிக்கப்பட்டார்.[6]விருப்பப்படி தனது வாழ்நாள் முழுவதும் மெஹ்முதா கன்னியாகவே வாழ்ந்து 2014 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று, தனது 94 வயதில், ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவரது மரண எச்சங்கள் மால்டெங்கில் உள்ள உள்ளூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

குறிப்புகள்

  1. Nyla Ali Khan, Gopalkrishan Gandh (2014). The Life of a Kashmiri Woman: Dialectic of Resistance and Accommodation. Palgrave Macmillan. பக். 36 of 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781137463296. https://books.google.com/books?id=HNjiAwAAQBAJ&q=Mehmooda+Ali+Shah&pg=PA36. 
  2. "PDP condoles death of Ms Mehmooda Ahmad Ali Shah". Scoop News. 11 March 2014. http://www.scoopnews.in/det.aspx?q=36350. பார்த்த நாள்: 10 December 2015. 
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 21 July 2015. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Mehmooda Ahmed Ali Shah - Obituary". Kashmir Life. 24 March 2014. http://www.kashmirlife.net/mehmooda-ahmed-ali-shah0306-57275/. பார்த்த நாள்: 11 December 2015. 
  5. "Mehmooda Shah passes away". Greater Kashmir. 12 March 2014 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222161731/http://www.greaterkashmir.com/news/kashmir/mehmooda-shah-passes-away/165675.html. பார்த்த நாள்: 11 December 2015. 
  6. 6.0 6.1 "Mehmooda Ahmed Ali Shah: A Great educationist". Kashmir Times. 23 March 2014 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222141408/http://www.kashmirtimes.in/newsdet.aspx?q=30279. பார்த்த நாள்: 11 December 2015. 
  7. "Details of Pensioners-Family Pensioners as of March 2014". J and K Legislative Assembly. 2014 இம் மூலத்தில் இருந்து 22 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222135214/http://jklegislativeassembly.nic.in/website%20material/pensioners.htm. பார்த்த நாள்: 11 December 2015. 

மேலும் படிக்க

"https://tamilar.wiki/index.php?title=மெஹ்முதா_அகமது_அலி_ஷா&oldid=18904" இருந்து மீள்விக்கப்பட்டது