மாதவனும் மலர்விழியும் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாதவனும் மலர்விழியும்
இயக்கம்மாசில்
இசைவசந்தமணி
நடிப்புஅசுவின்
சிஜா ரோசு
ஒளிப்பதிவுநித்யா
வெளியீடு2014 பெப்ரவரி
மொழிதமிழ்

மாதவனும் மலர்விழியும் 2014 பெப்ரவரியில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை மாசில் இயக்கியுள்ளார்[1]. அசுவின், சிஜா ரோசு, நீரசா, பொன்னம்பலம் போன்ற பலர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

தாய், தந்தை இல்லாத மாதவன் கொடைக்கானலில் பாட்டியிடம் வாழ்ந்து வருகிறார். இவர் மீது பாட்டி மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது காஞ்சனாவை சந்திக்கிறார் மாதவன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக் கொள்கிறார்கள். திமிராகப் பேசும் காஞ்சனாவை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதனால் காஞ்சனாவை அடிக்கடி சந்திக்க வழியைத் தேடுகிறார் மாதவன்.

அப்போது இளம் விதவையான மலர்விழி நடத்தும் நடனப்பள்ளியில் காஞ்சனா நடனம் பயின்று வருவது மாதவனுக்கு தெரிகிறது. உடனே அவரும் அந்த நடனப் பள்ளியில் சேருகிறார். அங்கேயும் இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள். நடனப்பள்ளி நடத்தும் மலர்விழி அடிக்கடி மயக்கம் போட்டு விழுபவர். ஒருநாள் மாதவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு மருத்துவர், நீங்கள் இளம் விதவை, உங்களுக்குக் கண்டிப்பாக ஒரு ஆண் துணை தேவை. அடுத்த தடவை நீங்கள் மயக்கம் போட்டு விழுந்தால் ஆண் துணையில்லாமல் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று ஆலோசனை கூறுகிறார். இதனை வெளியில் இருந்து கேட்டு விடுகிறார் மாதவன்.

இந்நிலையில் ஒருநாள் மாதவன், மலர்விழி வீட்டுக்குச் செல்கிறார். அங்கு மயங்கிய நிலையில் மலர்விழி கிடக்கிறார். எனவே, மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி மலர்விழியுடன் இணைந்து விடுகிறார் மாதவன். இதனால் மலர்விழி காப்பாற்றப்படுகிறாள். இதன்பிறகு மலர்விழி ஞாபகமாகவே மாதவன் இருக்கிறார்.

இதற்கிடையில் மாதவனுடன் சண்டைப்போட்டு கொண்டிருந்த காஞ்சனா மனம் மாறி மாதவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் மாதவன், மலர்விழியை மணந்தாரா அல்லது காஞ்சனாவை மணந்தாரா என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்