மனோகரா (திரைப்படம்)
(மனோகரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மனோகரா | |
|---|---|
| இயக்கம் | எல். வி. பிரசாத் |
| மூலக்கதை | மனோகரா - பம்மல் சம்பந்த முதலியார் |
| திரைக்கதை | மு.கருணாநிதி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் கிரிஜா டி. ஆர். ராஜகுமாரி காகா ராதாகிருஷ்ணன் |
| வெளியீடு | 1954 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மனோகரா 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகமான மனோகராவை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதைக்கு மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார்.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு கட்டுரையில், 'பராசக்தி'(1952) படத்திற்கு முன்பாகவே 'மனோகரா' படத்தின் தயாாிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளாா்.[2]