மதுரைக் காருலவியங் கூத்தனார்
Jump to navigation
Jump to search
மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 325.
காருலவியம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் இருந்த இடம்.
பாடல் சொல்லும் செய்தி
பொருள் தேடச் செல்லவிருந்த தலைவனுக்குத் தோழி இதனைச் சொல்லித் தடுத்து நிறுத்துகிறாள்.
பெரும! கரடி புற்றைக் கிண்டிக் கறையானைத் தின்னும் வழியைக் கடந்து இவளுக்காக நீ வருகிறாய். அப்படிப்பட்ட நீ இவளைப் பிரிந்து செல்வது தகுமோ?