மசக்காளிப்பாளையம்
மசக்காளிப்பாளையம் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°01′03″N 77°00′00″E / 11.017400°N 77.000100°ECoordinates: 11°01′03″N 77°00′00″E / 11.017400°N 77.000100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 426 m (1,398 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641015 |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், பீளமேடு, காந்திபுரம், ஆவாரம்பாளையம், கணபதி, சிங்காநல்லூர் |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
மசக்காளிபாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 426 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மசக்காளிப்பாளையம் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'02.6"N 77°00'00.4"E (அதாவது, 11.017400° N 77.000100° E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், சிங்காநல்லூர், கணபதி, பீளமேடு ஆகியவை மசக்காளிப்பாளையம் ஊருக்கு அருகில் அமைந்துள்ள ஊர்களாகும்.
கல்வி - பள்ளி
மசக்காளிப்பாளையம் ஊரில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஓர் அரசுப் பள்ளி. தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் திகழும் இப்பள்ளியில் 530 மாணவர்கள் பயில்கின்றனர். 50 கணினிகள், மாணவர்கள் பயன்பாட்டுக்காக உள்ளன. தரமான கல்வி, ரோபோடிக்ஸ், யோகா, சதுரங்கம், பறையிசை, பாரம்பரிய விளையாட்டுகள், கராத்தே போன்ற கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றினால் முன்னணியில் இருக்கும் இப்பள்ளியில், மிக முக்கியமான நபர்களின் சிபாரிசுக் கடிதங்கள் இருந்தும் இடம் கிடைக்காமல் திரும்பும் பெற்றோர்கள் அதிகம்.[1] வளர்க்கப்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் காரணமாக பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படும் இப்பள்ளியின் உட்புற சுவற்றில் கலைநயம் மிக்க சிவப்பு, நீல மற்றும் பச்சை நிறங்களில் தொடருந்து ஒன்றின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும், இன்னொரு சுவற்றில் மாணவர்களின் பிறந்தநாள் குறித்த அறிவிப்புக்கான இடம் ஒன்றும் உள்ளது.[2] மழைமானி பொருத்தப்பட்ட அமைப்பு ஒன்றின் மூலமாக, மழையின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.[3] மாணவர்கள் சேர்க்கைக்கான விளம்பரங்களில், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர நன்மைகள் குறித்த செய்திகள் தெரியப்படுத்தப்ட்டுள்ளன.[4]
கல்லூரிகள்
அருகிலுள்ள பீளமேட்டில் பூ. சா. கோ. (PSG) குழும கல்லூரிகள் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள்) அமைந்துள்ளன.
போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து
மசக்காளிப்பாளையம் அருகே செல்லும் அவினாசி சாலை வழியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை செல்கின்றன.
தொடருந்து போக்குவரத்து
பீளமேடு தொடருந்து நிலையம், மசக்காளிப்பாளையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே உள்ளது. இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இருக்கிறது.
வான்வழிப் போக்குவரத்து
இங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 7 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ குருபிரசாத்,தி.விஜய். ""எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தாலும் சீட் கிடைப்பதில்லை!"- அட்மிஷனில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி!" (in ta). https://www.vikatan.com/news/education/coimbatore-corporation-masakalipalayam-school-tops-in-admission.
- ↑ Jeshi, K. (2020-02-29). "Corporation Middle School in Masakalipalayam showcases cheerful artwork on its walls" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/life-and-style/corporation-middle-school-at-masakalipalayam-in-coimbatore-showcases-cheerful-artwork-on-its-walls/article30950607.ece.
- ↑ "Students become rain experts at Masakalipalayam Corporation School". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/nov/24/students-become-rain-experts-at-masakalipalayam-corporation-school-2066412.html.
- ↑ Madhavan, Karthik (2019-04-07). "Corporation school’s admission initiative goes viral" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/corporation-schools-admission-initiative-goes-viral/article26763871.ece.