பெருங்கௌசிகனார்
Jump to navigation
Jump to search
பெருங்கௌசிகனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன; அவை நற்றிணை 44, 139.
ஒப்புநோக்குக
- இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்பவர் மற்றொரு புலவர்.
பெருங்கௌசிகனார் பாடல்கள் சொல்லும் செய்தி
மின்மினி விளக்கம்
- அவளை நாடிச் சென்ற அவன் அவள் தன் வீட்டில் செறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறான்.
- அன்று ஆயத்தோடு அருவி ஆடினாள். நீரலைப் பட்டுச் சிவந்த கண்களால் அவள் என்னைக் குறியா நோக்கமொடு பார்த்து முறுவலித்துவிட்டு மனைக்குத் திரும்பினாள். இன்று அவள் முற்றத்தில் தினைக்கதிர்கள் காய்கின்றன. கோடல் பூக்கண்ணியைச் சூடிக்கொண்டு குறவர் சுற்றமே அந்த முற்றத்தில் சூழ்ந்திருக்கிறது. அங்கே அவள் மழைமேகங்கள் தவழ்ந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவர்களது ஆசினிப் படப்பையில் பறக்கும் மின்மினி விளக்கத்தில்தான் அவளைப் பார்க்க முடிகிறது. அவள் மலைநாடன் காதல் மகள்.
- நற்றிணை 44
மழைவாழ்த்து
- வினைமுற்றி மீண்ட தலைவன் தலைவியோடு பள்ளியறையில் இருந்துகொண்டு மழையை வாழ்த்துகிறான்.
- எழிலி! நீ மலைமேல் ஏறியிருக்கும்போது உலகே உன்னைத் தொழுகிறது. நீ யாழில் எழும் படுமலைப்பண் போன்ற ஒலியுடன் பொழிகிறாய். முழவு போல முழங்குகிறாய். நான் என் மனைவியுடன் கூடியிருக்கும்போது எங்களை வாழ்த்துவது போல மலர்கள் உதிரக் காற்றுடன் வீசிப் பொழிகிறாய். (நீ வாழி)
- நற்றிணை 139