ந. சிதம்பர சுப்பிரமணியன்
[புகைப்படத்திற்கு நன்றி பசுபதிவுகள்] ந. சிதம்பர சுப்பிரமணியன் (30 நவம்பர் 1912 – 26 ஏப்ரல் 1977) காரைக்குடியில் பிறந்தவர். மணிக்கொடி எழுத்தாளர். மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, எழுத்து ஆகிய சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை எழுதியவர். கடைசியாக வாகினி ஸ்டுடியோவில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்கள் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.
படைப்புகள்
சிறுகதைத் தொகுதிகள்
- சக்ரவாகம் (1940)
- சூரியகாந்தி கதைகள் (1950)
- வருஷப்பிறப்பு முதலிய கதைகள் (1956)
- ஒரு நாள் வேலை (2022)
புதினங்கள்
- இதய நாதம் (1952)
- நாகமணி (1959)
- மண்ணில் தெரியுது வானம் (1969)
நாடகம்
- ஊர்வசி(1944)
உசாத்துணைகள்
- தமிழில் சிறுகதையும் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், பிலோமினா பதிப்பகம், சென்னை, 1977, பக்.14