நீலம்பேரூர் (Neelamperoor) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1] இக்கிராமம் அதன் காயல்கள், ஏரிகள் மற்றும் நெல் வயல்களுக்குப் புகழ்பெற்றது. இங்கு இந்து மற்றும் கிறித்துவ மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

நீலம்பேரூர்
Neelamperoor

கிராமம்
ஆள்கூறுகள்: 9°29′45″N 76°30′27″E / 9.495943°N 76.507598°E / 9.495943; 76.507598
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

இந்த இடத்தின் அடையாளமாக நீலம்பேரூர் பள்ளி பகவதி கோயில் திகழ்கிறது. ஓணம் பண்டிகைக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும், வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கும் புகழ்பெற்ற 'பூரம் படையணி' திருவிழாவிற்கும் இந்தக் கோயில் பெயர் பெற்றதாகும். பி.என். பணிக்கர், நீலம்பேரூர் மதுசூதனன் நாயர் மற்றும் பல கதகளி கலைஞர்கள் உட்பட பல பிரபலங்களுடன் நீலம்பேரூர் தொடர்புடையதாகும்.

கினானாயா கிறித்துவ சமூகத்திற்கு இக்கிராமம் ஒரு முக்கியமான இடமாகும். மேலும் இதன் விசுவாசிகளுக்காக செயின்ட் சியார்ச்சு கினானாயா தேவாலயம் என்ற பெயரில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தேவாலயத்திற்கு 175 வயது ஆகிறது. ஏறக்குறைய 900 குடும்பங்கள் இத்தேவாலயத்தில் வழிபடுகின்றனர்.

நீலம்பேரூருக்கு அருகிலுள்ள ஒரு பகுதியான கருநட்டுவாலா, பழங்காலத்தில் ஒரு முக்கிய வர்த்தக மையமாகச் செயல்பட்டது. கருநட்டுவாலா என்பது கோட்டயம் பிரதான நிலப்பகுதியை இணைக்கும் இடமாக இருந்தது. பழங்காலத்தில் தரைவழிப் போக்குவரத்து கருநட்டுவாலா வரை மட்டுமே இருந்தது. அதன் பிறகு மக்கள் காயல் நீர்வழிப் போக்குவரத்தையே நம்பியிருந்தனர். முற்காலத்தில் இந்த இடம் சங்கனாச்சேரி தாலுகாவைச் சேர்ந்ததாக இருந்தது. பின்னர் விவசாயிகளின் போராட்டத்தால் குட்டநாடு தாலுகாவுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நீலம்பேரூர்&oldid=418026" இலிருந்து மீள்விக்கப்பட்டது