துளசிமதி முருகேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

துளசிமதி முருகேசன் (Thulasimathi Murugesan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓர் இணை இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] இணை இறகுப்பந்து போட்டிகளில், கீழ் மூட்டுகள் குறைபாடு வகையினருக்கான போட்டிகளான எசுஎல்3-எசுயூ5 போட்டிகளிலும் மற்றும் மேல்மூட்டு குறைபாட்டு வகையினருக்கான போட்டிகளில் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றார்.

தொழில்

2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் துளசிமதி 5 ஆவது பன்னாட்டு பாசா துபாய் இணை இறகுப்பந்து போட்டியில் மானசி இயோசியுடன் சேர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார் [2] பின்னர் கலப்பு இரட்டையர் எசுஎல்3 மற்றும் எசுயூ5 வகை போட்டி ஆகியவற்றில் நித்தேசு குமாருடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கம் வென்றார். மானசியுடன் இணைந்து, உலக இணை-இறகுப்பந்து இரட்டையர் தரவரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். [3] ஐதராபாத்து நகரத்தில் பயிற்சியாளர் கோபிசந்திடம் துளசிமதி பயிற்சி பெற்றார். [4]

காங்சூவில் நடந்த 4 ஆவது ஆசிய இணை விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை துளசிமதி வென்றார். [5] 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று கலப்பு இரட்டையர் எசுஎல்3-எசுயூ5 வகையினர் இரட்டையர் போட்டியில் நித்தேசு குமாருடன் அணியாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார். அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று பெண்கள் இரட்டையர் எசுஎல்3-எசுயூ5 வகையினர் போட்டியில் மானசி இயோசியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தனிப்பட்ட பெண்கள் ஒற்றையர் எசுயூ5 வகையினருக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தார். [6] [7]

மேற்கோள்கள்

  1. Sportstar, Team (2023-10-21). "India at Asian Para Games 2023: Full list of Indian athletes" (in en). https://sportstar.thehindu.com/asian-games/india-at-asian-para-games-2023-complete-list-of-indian-athletes-china-hangzhou-2022-news/article67445414.ece. 
  2. "Manasi-Murugesan win gold, Pramod Bhagat secures two silver medals at Fazza Dubai Para Badminton International". 2023-12-18. https://timesofindia.indiatimes.com/sports/badminton/manasi-murugesan-win-gold-pramod-bhagat-secures-two-silver-medals-at-fazza-dubai-para-badminton-international/articleshow/106091958.cms. 
  3. PTI (2023-12-18). "Manasi-Murugesan pair wins women's doubles gold, Bhagat secures 2 silver medals at Fazza Dubai Para Badminton International" (in en). https://sportstar.thehindu.com/badminton/pramod-bhagat-silver-medal-2023-fazza-dubai-para-badminton-international-manasi-joshi-thulasimathi-murugesan-results/article67650233.ece. 
  4. "Dubai Para Badminton International 2023: Manasi-Thulasimathi wins doubles gold, India return with 14 medals" (in English). https://khelnow.com/badminton/2023-12-dubai-para-badminton-international-2023-report. 
  5. Parkar (2023-10-28). "Asian Para Games 2023 medal tally: Indian winners - full list". https://olympics.com/en/news/asian-para-games-2023-hangzhou-india-medal-winners-tally-table. 
  6. "Asian Para Games Day 3: Medal rush continues for India; medal tally stands at 34" (in en). 2023-10-25. https://www.livemint.com/sports/asian-para-games-day-3-medal-rush-continues-nitesh-kumar-thulasimathi-murugesan-bag-bronze-in-badminton-mixed-doubles-11698208260678.html. 
  7. Sekar. "Asian Para Games : பாரா ஆசிய விளையாட்டு போட்டி - பேட்மிண்டனில் தங்கம் வென்ற தமிழச்சி!" (in ta). https://tamil.hindustantimes.com/sports/murugesan-thulasimathi-wins-gold-medal-in-womens-singles-su5-badminton-event-at-asian-para-games-2023-131698389246885.html. 

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=துளசிமதி_முருகேசன்&oldid=25663" இருந்து மீள்விக்கப்பட்டது