தீப்பொறி (இதழ்)
Jump to navigation
Jump to search
தீப்பொறி ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகை. 1967 இல் ம. க. அந்தனிசில்லை ஆசிரியராகக் கொண்டு வார இதழாக இது வெளிவந்தது. கம்யூனிசக் கோட்பாடுகளையும், மாக்சிசத் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் சார்பு பத்திரிகையாக இது தன்னை இனங்காட்டியது. அந்தனிசில் தமது அனல் கக்கும் வசனங்களாலும் சந்தம் நிறைந்த தமது அதிரடித் தலைப்புகளினாலும் தமது பத்திரிகையைப் பரபரப்புக்கு உட்படுத்தினார். இலங்கை அரசினால் இப்பத்திரிகை தடை செய்யப்பட்டதும், அந்தனிசில் "பல்கலை" என்ற பெயரில் 1970 ஆம் ஆண்டில் வார இதழைத் தொடங்கினார். பின்னர் ஒரு தீப்பொறி என்ற பெயரில் 1972 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வெளிவரச் செய்தார். காலப்போக்கில் அடிக்கடி மாறும் கொள்கையுடன் இது எழுதி வந்ததால் செல்வாக்கிழந்தது. 1982 இல் இதன் வெளியீடுகள் முற்றாகத் தடைப்பட்டன.