திருநெல்வேலி (இலங்கை)
(தின்னவேலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருநெல்வேலி | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாண மாவட்டம் |
| அமைவிடம் | 9°40′48″N 80°01′48″E / 9.680031718651435°N 80.03001072422845°E |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
திருநெல்வேலி (Thirunelveli), இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இது நல்லூர் பிரதேச சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. வடக்கே கோண்டாவிலும், கிழக்கே கல்வியங்காடு மற்றும் நல்லூரும், தெற்கே கந்தர்மடமும், மேற்கே கொக்குவிலும் திருநெல்வேலியின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி திருநெல்வேலியை ஊடறுத்துச் செல்கின்ற பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதி, திருநெல்வேலி ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகும். 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது.[2]
கிராம சேவையாளர் பிரிவுகள்
- J/110 திருநெல்வேலி மேற்கு
- J/111 திருநெல்வேலி மத்திதெற்கு
- J/112 திருநெல்வேலி தென்கிழக்கு
- J/113 திருநெல்வேலி வடகிழக்கு
- J/114 திருநெல்வேலி மத்திவடக்கு[3]
ஆலயங்கள்
- ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், திருநெல்வேலி
- ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோயில், திருநெல்வேலி
- திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்
- திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்
- தலங்காவற் பிள்ளையார் கோவில்[4]
- திருநெல்வேலி சிவன் கோயில் (ஸ்ரீ நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயம்)
- திருநெல்வேலி கிழக்கு கேணியடி ஞானவைரவர் ஆலயம்
- திருநெல்வேலி கிழக்கு சித்திரவேலாயுதர் தேவஸ்தானம்
- திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் ஆலயம்
- திருநெல்வேலி கிழக்கு முடமாவடி ஞானவைரவர் ஆலயம் (இராமலிங்கம் வீதி)
- திருநெல்வேலி கிழக்கு விளாத்தியடி ஞானவைரவர் ஆலயம் (இராமலிங்கம் வீதி)[5]
- திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் (ஆடியபாதம் வீதி)
பாடசாலைகள்
- பரமேஸ்வராக் கல்லூரி, யாழ்ப்பாணம்
- செங்குந்த இந்துக் கல்லூரி
- முத்துத்தம்பி மகாவித்தியாலயம்[6]
- திருநெல்வேலி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை
- திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
நிறுவனங்கள்
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம்
- திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்
- திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம்[7]
இவற்றையும் பார்க்க
- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்
- திருநெல்வேலித் தாக்குதல், 1983
மேற்கோள்கள்
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] பிரதேச செயலாளர் பிரிவு: நல்லூர் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழியில்)
- ↑ மேலாண்மை அலகுகளின் குடித்தொகை மதிப்பீட்டுக் குறியீடுகள் (ஆங்கில மொழியில்)
- ↑ "PILLAYAR KOVIL". https://thalankaval-pillayar.blogspot.com/.
- ↑ "vilaththiyadybairavar". https://vilaththiyadybairavar.blogspot.com/.
- ↑ "முகப்பு - thirunelvely". https://muthuthambymv.wixsite.com/thirunelvely.
- ↑ "100 years of Thirunelveali YMHA: anthropology of a grassroot institution". TamilNet. March 7, 2011. https://tamilnet.com/art.html?catid=79&artid=33643.