சூரியானந்தர்
Jump to navigation
Jump to search
சூரியானந்தர் ஒரு சித்தர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டவை இரண்டு நூல்கள்.
சூரியானந்தர் பதின்மூன்று,
சூரியானந்தர் இருபத்தைந்து
என்பன அவை. இரண்டும் இரசவாதம் [1] பற்றிக் கூறுகின்றன.
உடல் உறுப்புகளால் செய்யப்படும் பயிற்சிகளை இவர் ‘தீட்சை’ என்கிறார்.[2] உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மை செய்வதை இவர் ‘சவுக்காரம்’ என்று குறிப்பிடுகிறார்.
பாடல் (எடுத்துக்காட்டு) [3]
சொல்வது என்ன ரேசகத்தை [4] வெளிவிடாதே
- துடியான பூரகத்தைப் [5] பின்னிடாதே
வெல்வது என்ன கும்பகத்தை [6] அடிவிடாதே
- மேலேற்று மாத்திரையை [7] மறந்திடாதே
செல்வது என்ன கற்பகத்தை [8] மறந்திடாதே
- செந்தூரம் [9] சேர்க்கையிலே சிதறிடாதே
கொல்வது என்ன அமுர்து [10] அயிலே பறக்கும் இந்த
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ வாதம் என்னும் மூச்சுப் பயிற்சியால் உடலின் ஊறல்களைக் (gland) கட்டுக்குள் கொண்டுவருவது
- ↑ கொங்கணர் தீட்சை மார்க்கம், தச தீட்சை, அஞ்சு தீட்சை என்பன இவற்றில் சில வகைகள்.
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ வெளிவிடு மூச்சு
- ↑ உள்வாங்கு மூச்சு
- ↑ அடக்கும் மூச்சு
- ↑ மூச்சின் கால-அளவு
- ↑ மலவாயில் பயிற்சி
- ↑ விந்து
- ↑ அமிழ்தம் என்னும் பேரின்பம்
- ↑ தூய்மை
- ↑ பயிற்சி