பன்னம்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>AntanO
சி (Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 3: வரிசை 3:
*சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ.  தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
*சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ.  தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.
*'''பன்னம்பாறை''' என்றாலே நினைவுக்கு வருவது அழகான பசுமையான வயல்வெளிகளும், அதிக அளவில் காணப்படும் கோவில்களும் தான்.
தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது.
==பன்னம்பாறை - பெயர்க்காரணம் ==
இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
==பனம்பாரனார்==
[[தொல்காப்பியம்]] நூலிற்கு
’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’
என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் பதிவு செய்த [[பனம்பாரனார்]] என்ற சங்ககாலப் புலவரும் தொல்காப்பியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலைத் தமிழுலகிற்குத் தந்த தொல்காப்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்;இருவரும் ஒருபள்ளி மாணவர்கள். மேலும் இவருக்குப் பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் [[எட்டுத்தொகை]] நூலில் [[குறுந்தொகை]] 52 ஆம் பாடலான
‘’ஆர்களிரு மிதித்த நீர்த்திகழ் சிலம்பிற்……’’
எனத்தொடங்கும் பாடலைப் பாடிய புலவரின் பெயரும் [[பனம்பாரனார்]] ஆகும். முற்காலத்தில் சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் பிறந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்டன எனவே பனம்பாரனார் பிறந்தது இவ்வூராகலாம் என்ற கருத்தும் ஆய்வும் தமிழறிஞர்களிடம் உள்ளது.
==பன்னம்பாறை நில அமைப்பு==
இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இம்மண்.அழகிய நீரோடைகள், குளங்களைக் கொண்டுள்ளது.
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.
   
   
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 29: வரிசை 9:
== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
இங்கு [[பறையர்]], [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]], [[பிள்ளை|விஸ்வகர்மா]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.
இங்கு [[பறையர்]], [[இடையர்|கோனார்]], [[தேவர்|மறவர்]], [[பிள்ளை|விஸ்வகர்மா]] என்ற நான்கு சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்  இவ்வூரில் வசிக்கின்றனர்.
==பழமையான பல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு==
*பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு.
இவ்வூரின் வடக்கில் ஒரு ஓடை உள்ளது. பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வூரின் வடக்கே காணப்படும் பாறைப்பகுதியினிடையே ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. அது உளியை கொண்டு அடித்து செதுக்கப்பட்டு அல்ல மாறாக கற்களை கொண்டு கடைந்து செய்யப்பட்டது.<ref>[http://http://www.thokuppu.com/news/newsdetails/item_2592/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/]</ref>
குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://http://www.maalaimalar.com/2014/11/19113731/Discovery-the-ancient-village.html]</ref>
மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இந்த ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது. பல வழிப்போக்கர்கள் பயன்படுத்திய பெருவழிப்பாதை ஓன்று இங்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது.<ref>[http://http://tamil.allnews.in/all-news/city-news/short-news/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/189788]</ref>
==புராணக்கதைகள்==
இவ்வூரின் வடக்கில் காணப்படும் இந்த பல்லாங்குழிகள் சிவனும் பார்வதியும் பாண்டி விளையாடிய இடம் எனவும் அப்படி விளையாடி கொண்டிருக்கும் பொது பார்வதிக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் பார்வதி சிவனிடம் தண்ணீர் கேட்க சிவன் தன்னுடைய சூலாயுதத்தால் பாறையில் குத்தித் துளையிட்டு நீருற்றினை ஏற்படுத்தி பார்வதிக்கு தண்ணீர் கொடுத்தார் என்று இவ்வூரில் வசிக்கும் 72 வயது முதியவர் கணேசன் தெரிவித்தார்.இக்கதை பன்னம்பாறையில் வசித்து வரும் அனைவரும் நம்பும் ஒரு விசயமாகவும்  அந்த  தீர்த்தக்குழி இன்னமும் இங்கே உள்ளதும் இதன் தனி சிறப்பு.ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், பத்து அடி ஆழம் கொண்டதாகவும் அக்குழி உள்ளது.
இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்றும் கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்றும் அப்பகுதியில் வாழும் ஸ்ரீ ஈந்தடி சுடலை ஆண்டவர் திருக்கோவில் என்னும் பழமைவாய்ந்த  ஆலயத்தின் நிர்வாகி படம் பரமசிவம் மற்றும்  மாசான முத்து, சுரேஷ் ஆகியோர் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என இங்குள்ள  மக்களால் நம்பப்படுகின்றது. மேலும் இங்கு காணப்படும் நீரோடை பார்வதி தேவி குளித்த இடமாக கருதப்படுகிறது.
==கல்வெட்டு கண்டெடுப்பு==
*200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக் கண்டெடுப்பு
இங்குள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பன்னம்பாறையின் வடக்குப்பகுதியில் உள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலின் படிக்கட்டு ஒன்றில் எழுத்துக்கள் இருப்பது கண்ட கோயிலின் பரம்பரை பூசாரி எஸ்.பரமசிவம் , தமிழக அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பயிற்சி பெற்றவரான முனைவர் த.த.தவசிமுத்து அவர்களிடம் கூறினார்..
இது பற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,கோயிலின் படிக்கட்டாக இருந்த கல்வெட்டு ,முக்கால் அடி அகலமும் மூன்றே கால் அடி உயரமும் கொண்ட வெள்ளைக்கல்லிலான அப்பலகைக் கல்லில் ஐந்து வரிகளில் எழுத்து சிதைந்து காணப்பட்டது.இப்பலகைக் கல்லானது கல்வெட்டின் பின்தொடர்ச்சிப் பகுதி. முன்பகுதி கிடைத்தால் செய்தியை அறிந்து கொள்ள முடியும் என்ற போது,பூசாரி தாங்கள் தற்போது கோயிலின் கன்னி மூலையில் விநாயகராக வைத்து வழிப்படும் நடுகல் ஒன்றைக் காட்டினார்.பூமியில் நட்டி வைக்கப்பட்டிருந்த அப்பலகைக் கல்லைத் தோண்டிப்பார்த்தபோது அது முதலில் கண்ட பலகைக்கல்லின் உடைந்த முன் பகுதி என கண்டறியப்பட்டது.இரண்டையும் சேர்த்தபோது ஐந்தரை அடி நீளத்துடன் பத்து வரிகளுடன் கல்வெட்டு காணப்பட்டது. அதன் தலைப்பகுதியில் எண்ணெய் பூச்சினால் ஒரு அங்குலம் படிமம் ஏறியிருந்தது. அதனை சுத்தம் செய்த பின்பு அதில் விநாயகரின் வாகனமான எலியின் புடைச்சிற்பம் முன்னங்காலை படிக்கட்டு ஒன்றில் தூக்கி வைத்திருப்பது போலவும், அதன் வாலின் அருகில் குத்து வாளும்,மேலே விநாயகரின் அங்குசமும், வலதுபுறம் சிதைந்த நிலையில் கோட்டுருவத்தில் பிறைச்சந்திரன், இடது புறம் சூரியனும் உள்ளது இச்சின்னம் இரண்டரை அடி உயரத்திலும், அதன் கீழே பத்து வரிகளில் ’’சுவாமி சிதம்பர விநாயகர் கட்டளைக்கு ………. உம்பளம்’’ என்ற எழுத்துக்கள் உள்ளன. உம்பளம் என்றால் மன்னரால் மானியமாக வழங்கப்படது என்பதாகும்.பிற நில அளவைகள் குறிப்புக்கள் சிதைவடைந்து உள்ளன.இருப்பினும் இக்கல்வெட்டானது சிதம்பர விநாயகர் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின் ஒப்புதலோடு வரி நீக்கி நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்த எல்கைக் கல்லாகும்.பழங்காலத்தில் கோயில்களின் வழிபாட்டிற்காக அரசர்கள் நிலத்தை வரி நீக்கி தானமாக வழங்குவர் சிவன் கோயிலுக்குரிய நிலம் தேவதானம் எனப்படும். நட்டுவிக்கப்படும் கல்லில் திரி சூலம் பொறிக்கப்பட்டு நிலம் பற்றிய செய்தியும் எழுதப்பட்டு இருக்கும் அது சூலக்கல் எனப்படும்.புத்த,ஜைன பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிலம் பள்ளிச்சந்தம் எனப்படும்.பெருமாள் கோயிலுக்குரிய நிலம் திருவிடையாட்டம் எனப்படும் சக்கரம் பொறிக்கப்பட்ட கல் எல்கையில் நடப்பட்டு ஆழிக்கல் என்று அழைக்கப்படும்..
தற்போது பன்னம்பாறையில் கிடைத்துள்ள இக்கல்லில் விநாயகரின் கையிலிருக்கும் அங்குசம்,மற்றும் எலியின் சின்னத்துடன் ,நிலம் பற்றிய செய்தியும் பொறிக்கப்பட்டு உள்ளதால் இதனை அங்குசக்கல் என்றழைக்கலாம் என்றும், இக்கல்வெட்டு குறித்த மேலாய்வு நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார்.
.இக்கல்வெட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கிணற்றில் தூர் வாறும் போது உடைந்த நிலையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு கிடைத்த ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலுக்கு அருகே சிதம்பர விநாயகர் கோயிலும்,குளமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>[http://http://ttthavasimuthu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D]</ref>
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/88559" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி