திருவாஞ்சியம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Arularasan. G
சி (InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 71: வரிசை 71:
# புதுப்பேட்டை
# புதுப்பேட்டை
# சுக்கிரவாரகட்டளை
# சுக்கிரவாரகட்டளை
# திருவாஞ்சியம் '''திருவாஞ்சியம் (நன்னி)'''            நால்வர் தேவாரத்திலும் வாஞ்சியம் என சிறப்பித்து பாடப்பெற்றுள்ள இவ்வூர்  இடைக்கால பனையூர் நாட்டிற்கு உள்ளிடங்கிய ஓர் ஊராகும். தற்போது நன்னிலம் நகரப்பகுதியில் இருந்து தோரயமாக 6 கி.மீ  நேர் மேற்கு திசையில் மாப்பிள்ளைகுப்பம்–குடவாசல் சாலையில், புத்தாற்றின் (குலோத்துங்க சோழ பேராறு) வடகரையில்  திருவாஞ்சியம், அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் திருவாஞ்சியம் ஊராட்சியின் தலைமை ஊராகும், இவ்வூருக்கு உள்ளடங்கிய ஊர்களாக அபிஷேககட்டளை, சுக்கரவாரகட்டளை, திருப்பணிபேட்டை,  அரசடிநத்தம்,  மேற்கண்ணமங்கலம்,  நேருநகர் மற்றும்  காமராஜ்நகர் ஆகிய ஊர்கள் உள்ளன.             திருநாவுக்கரசரால் தேவாரம் பாடப்பெற்றுள்ளதால் இக்கோயிலும், ஊரும் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதை அறிய முடிகிறது. இவ்வூரின் வடக்கு வீதியின் கிழக்கு திசையில் உள்ள பழைய சிவன் கோயில் திடலில் (தேவாரம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலாக கூட இருக்கலாம்,) தற்போது பெரிய அளவிலான ஆவுடையுடன் கூடிய பெரிய சிதலமடைந்த லிங்கம் மட்டும் உள்ள இக்கோயிலின் அடிப்பகுதி அர்த்த, மகா மண்டபங்கள் இருந்த பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் சேகரிப்பு கிடங்கு அமைக்கபட்டு விட்டது. இந்த பகுதியில் இருந்து கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் 2016 ஆம் ஆண்டு கள ஆய்வின் ஊடாக சேகரிப்பட்டுள்ளது. இதன் ஊடாக இவ்வூர் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதை அனுமானிக்க முடிகிறது. பொதுவாக தேவாரபாடலில் குறிப்பிடப்பெற்றுள்ள ஊர்களில் கருப்பு சிவப்பு பனை ஓடுகள் கிடைப்பது பரவலாக உள்ளது.  இக்கோயில் இறைவனை (ஸ்ரீவாஞ்சிநாதர்) இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்காரசர், சுந்தரர், தமது தேவார திருவாசகங்களிலும் மாணிக்கவாசகரின் திருகோவையிலும், அருணகிரிநாதரின் திருப்புகளிலும் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு களந்தைக் குமரன் என்பவர் பொ,ஆ 1898 ஆம் ஆண்டில் தலப்புராணமும் இயற்றியுள்ளார். திருஞானசம்பர் தமது தேவாரப்பதிகங்களில் இன்றை திருவாஞ்சியத்தை திருவாஞ்சியம் என்றும் இவ்வூர் இறைவனை திருவாஞ்சியத்து அடிகள் என்று குறிப்பிடுகிறார்..  ”செடிகொள் நோயின்அடை யார்திறம்  பார்செறு தீவினை  கடிய கூற்றமுங் கண்டக  லும்புகல் தான்வரும்  நெடிய மாலோடயன் ஏத்தநின்  றார்திரு வாஞ்சியத்  தடிகள் பாதமடைந் தாரடி  யாரடி யார்கட்கே”.                          திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை  <br />           அப்பர் (திருநாவுக்கரசர்) தனது தேவாரபதிகங்களில் இவ்வூரினை ”சுற்று மாடஞ்சூழ்” நகரமாக இருந்தாக குறிப்பிடுகிறார். மேலும் திருவாஞ்சியத்தில் நான்கு வேதங்களை கற்பிக்கும் வேதப்பாடசாலை இருந்ததையும் அதில் வேள்வியர் தங்கி பாடம் கற்ற செய்திதையும் அறிய முடிகிறது. இப்பகுதி முன்னிடைக்காலத்தில் ஒரு நகரமாக இருந்துள்ளது என்பதனை தேவாரப்பாடல் வழியாக அறியமுடிகிறது.  ''”புகழாற் பொருகுந் திருவாஞ்சியம்''  ''மாலை கோலமதி  மாடம் மன்னும் திருவாஞ்சியம்''  ''சுற்று மாடங்கள்சூழ்  திருவாஞ்சியம்''  ''தெற்கு மடாடங்கள் சூழ்திருவாஞ்சியம்”''                                                                 அப்பர் தேவாரம் ஐந்தாம் திருமுறை -05.067.03  ''”அப்பர் அங்கமாறும் அருமறை நான்குடன்''  ''தங்கு வேள்வியர் தாம் பயிலுந்நகர்''  ''செங்கண் மாலிடமார் திருவாஞ்சியம்''  ''தங்கு வார்நம் அமரர்க் கமரரே ”''                                                                    அப்பர் தேவாரம் ஐந்தாம் திருமுறை 05.067.04  <br />எட்டாம் நூற்றாண்டை சார்ந்த சுந்தரர் தனது தேவாரப்பகுதிகளில் இன்றைய திருவாஞ்சியம் ”திருவாஞ்சியம்” என்ற பெயரிலே பொ.ஆ எட்டாம் நூற்றாண்டிலும் இருந்ததையும் இறைவனது பெயர் “வாஞ்சியத்து அடிகள்” என்றும் குறிப்பிடுகிறார். மேலும் இப்பகுதியில் அதிகளவிலான நீர் நிரம்பிய பொய்கைகள் இருந்தாக தமது தேவாரபதிகங்களில்  பதிவு செய்திருக்கிறார். தற்போதும் இவ்வூரில் 7 -க்கு மேற்பட்ட குளங்கள் பயன்பாட்டில் உள்ளன.  ''“சள்ளை வெள்ளையம் குருகு தானது ஆம் எனக் கருதி''  ''வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்''  ''துள்ளு தெள்ளும் நீர்ப் பொய்கைத் துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்''  ''வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே“.''  சுந்தரர் தேவாரப்பாடல் ஏழாம் திருமுறை 7-4  <br />.           திருவாஞ்சியம் வாஞ்சிநாதர்கோயில் உள்ள முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் வாயிலாக இவ்வூர் தேவதான (ந.க.தொ.1-19)  ஊராக இருந்ததை அறிய முடிகிறது. பாண்டிய மன்னர் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்     ஆட்சிக் காலத்தில்  “அகரம் திருவாஞ்சியம்” என்கிற இராஜகம்பிர சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் சதுர்வேதிமங்கலமாக மாற்றம் பெற்றிருக்கிறது. (ந.க.தொ.1/25) சோழர் காலத்தில் வெள்ளான் வகை ஊராக இருந்த இவ்வூர் பாண்டியர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிராமணர் குடியேற்றத்தால்  சதுர்வேதிமங்கலமாக  மாற்றம் பெற்றிருக்கிறது.    தற்போது திருவாஞ்சியத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சிநாதர் திருக்கோயில் முதலாம் குலோத்துங்கன்(1071-1122) காலத்தில் கற்றளியாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வூர் வாஞ்சிநாதர் கோயிலின் உள்பகுதியில் மூன்றாம் இராஜராஜன் காலத்தில் தனிநபர் ஒருவரின் நல்ககையால் திருக்கோட்டமுடைய நாச்சியார் என்றப் பெயரில்  கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. (ந.க.தொ.1-20) இவ்வூரின் வடக்கு வீதியில் சைமடம் ஒன்று இருந்ததை குகை (ந.க.தொ.1-20) என்று மூன்றாம் இராஜராஜன்(1216-1250) கல்வெட்டு குறிப்படுவதன் வாயிலாக அறியமுடிகிறது. இதே மன்னனின்  ஆட்சி ஆண்டு கல்வெட்டின் வாயிலாக இவ்வூரில் தட்சிணாமூர்த்தி மற்றும் சுப்பிரமணி பிள்ளையார் (ந.க.தொ.1-27) என்ற கடவுளர்களுக்கு தனிக் கோயில்கள் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் பரக்கிரம பாண்டியன் கால கல்வெட்டு குறிப்பு வாயிலாக திண்டுமீஸ்வரர் என்ற மற்றொரு சிவன் கோயிலும், அழகிய பெருமாள் நாச்சியார் (ந.க.தொ.1-28) என்ற ஒரு கோயிலும் இவ்வூரில் இருந்தததை அறிய முடிகிறது. இவ்வூரின் வடக்கு வீதியின் கீழ்ப்பகுதியில் லிங்கம் மட்டும் உள்ள அப்பகுதி இடைக்கால கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திண்டுமீஸ்வரர் கோயிலாக இருக்காலம். இடைக்காலத்தில் இவ்வூரில் இருந்து தஞ்சை  பெரியக்கோயிலுக்கு முதலாம் இராஜராஜன் காலத்தில் “திருவாஞ்சியத்து அடிகள்” என்ற பெயரில் நபர் ஒருவர்  திருப்பதியம் விண்ணப்பம் செய்ய சென்றிருப்பதை அறியமுடிகிறது. இந்நபர் திருப்பதியம் பாடுபவர்களில் முதண்மை நபராக இருந்ததையும் அறியமுடிகிறது,
# திருவாஞ்சியம்
# அபிஷேகக்கட்டளை
# அபிஷேகக்கட்டளை
<!--tnrd-habit-->
<!--tnrd-habit-->
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/69022" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி