தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
"{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து எட்டாம்பத்து}} படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sengai Podhuvan
(Sengai Podhuvan பக்கம் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பதை பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன் என்பதற்கு நகர்த்தினார்: பெயருக்கு முதலிடம் - வேறுபடுத்திக் காட்டத் தரப்பட்டுள்ள அடைமொழிக்கு அடுத்த இடம்)
 
("{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து எட்டாம்பத்து}} படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன்]]
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து எட்டாம்பத்து}}
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்]]
'''தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை''', பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான [[செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப்]] பின் [[சேர நாடு|சேர நாட்டின்]] அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. [[அரிசில் கிழார்]] என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.
 
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் [[அதியமான்|அதியமானை]] வென்றதன் மூலம் இவனுக்குத் 'தகடூர் எறிந்த' என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே [[தகடூர் யாத்திரை]] என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர், துயில் கலையும் வரை, கவரி வீசினான் இவன், என்று புகழப்படுகிறான்<ref>புலியூர்க் கேசிகன், பக். 333</ref>..
 
[[கருவூர்|கருவூரைச்]] சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது<ref>டான் பொஸ்கோ</ref>.
 
இவனை
*குட்டுவன் இரும்பொறை <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 9</ref>
*சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை <ref>[[மோசிகீரனார்]] புறம் 50</ref>
*தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 8</ref>
*பூழியர் மெய்ம்மறை <ref>பதிற்றுப்பத்து 73</ref>
*கொடித்தேர்ப் பொறையன் <ref>பதிற்றுப்பத்து 73</ref>
*இயல்தேர்ப் பொருநன் <ref>பதிற்றுப்பத்து 75</ref>
*கோதை மார்பன் <ref>பதிற்றுப்பத்து 79</ref>
** [[சேரமான் கோக்கோதை மார்பன்]] வேறு அரசன்
ஆகிய வேறு பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.
 
==வரலாறு==
அரிசில் கிழார் இவனைப் பாடிய 10 பாடல்கள், 'பதிற்றுப்பத்து' நூலில், 8-ம் பத்தாக உள்ளன.
 
==நாடு==
*அரிய பொருள்களை இறக்குமதி செய்யும் [[கொடுமணம்]] என்னும் துறைமுகமும், முத்துக்குப் பெயர்போன [[பந்தர்]] நகரமும், இவன் நாட்டில் இருந்தன. <ref>பதிற்றுப்பத்து 74</ref>
 
==வெற்றிகள்==
*[[அதியமான்|அதியமானையும்]] இருபெரு வேந்தர்களையும், கொல்லி மலை [[நீர்கூர்|நீர்கூரில்]] நடந்த போரில் வென்று, அவர்களது முரசையும் குடையையும் கைப்பற்றிக்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 8</ref>
*அதியமானின் [[தகடூர்|தகடூரையும்]] கைப்பற்றிக்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து 78</ref> <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 8</ref>
*[[தோட்டி]] நகரைக் கைப்பற்றினான். <ref>ஆர் எயில் தோட்டி வௌவினை பதிற்றுப்பத்து 71</ref>
*[[கழுவுள்]] என்பவனின் தலைநகரைப் பாழாக்கினான். <ref>பதிற்றுப்பத்து 71</ref>
*இவனது போர்ப்படை யானைகள், [[கொங்கர்]] மேய்க்கும் ஆனிரைகள் போல மிகுதி. <ref>பதிற்றுப்பத்து 77</ref>
*இவனது போர்க் குதிரைகள், இவன் நாட்டில் மேயும் ஆடுகள் போல் மிகுதி. <ref>பதிற்றுப்பத்து 78</ref>
 
==இவனுக்குப் புலவர் அறிவுரை==
*அறிந்தவர்களையும் (உரவர்), அறியாதவர்களையும் (மடவர்) எண்ணிப்பார்த்துச் செயல்படவேண்டும். <ref>பதிற்றுப்பத்து 71</ref>
*உன் முன்னோரின் வலிமையை உணர்ந்தவர்கள், உன் வலிமையை உணரவில்லை. அறிந்து செயல்படுக. <ref>பதிற்றுப்பத்து 72</ref>
 
==மகன்==
* வீறுசால் புதல்வன் இவனுக்கு உண்டு,Peyar Padhuman.  <ref>பதிற்றுப்பத்து 74</ref>
 
==கொடை==
* தன்னிடம் இரப்பவர்களுக்கு வழங்கும்போது, முன்பே இரந்தவர்கள் வாழ்வுக்காகச் சேர்த்துத் தடையின்றி வழங்கினான். <ref>பதிற்றுப்பத்து 76</ref>
 
==வாழ்த்து==
* புலவர் இவனை [[அயிரை மலை]] போல், நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>பதிற்றுப்பத்து 79</ref>
 
==குணநலன்கள்==
* பெரியோரைப் பேணுவான். சிறியோர்க்கு உதவுவான். <ref>பதிற்றுப்பத்து 79</ref>
** காண்க
*** [[சேரர் குடிப்பெயர்கள்]]
 
==குறிப்புகள்==
{{Reflist|4}}
 
==உசாத்துணைகள்==
* புலியூர்க் கேசிகன், ''பதிற்றுப்பத்து தெளிவுரை'', புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
* செல்லம், வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
* புலியூர்க் கேசிகன், ''புறநானூறு தெளிவுரை'', பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
* [http://www.keralahistory.net/1b.htm டான் பொஸ்கோ, ''பண்டைய கேரளாவின் வரலாறு'' 03 ஏப்ரல் 2009 இல் அணுகப்பட்டது.] {{Webarchive|url=https://web.archive.org/web/20090326050108/http://www.keralahistory.net/1b.htm |date=2009-03-26 }} {{ஆ}}
 
[[பகுப்பு:சங்ககாலச் சேரர்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
[[பகுப்பு:பதிற்றுப்பத்தில் பாடப்படும் சேர வேந்தர்‎|8]]
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12021" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி