சிந்தூரி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிந்தூரி
பிறப்புதமிழ்நாடு, சென்னை
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை

சிந்தூரி (Sindhuri) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். பாய்ஸ் (2003) திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, சூப்பர் டா (2004), குண்டம்மா காரி மனவாடு (2007) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொழில்

சிந்தூரி தனது நடிப்பு வாழ்க்கையை ஷங்கரின் பாய்ஸ் (2003) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் வழியாக தொடங்கினார். அதில் இவர் ஜெனிலியாவின் நான்கு தோழிகளில் ஒருவராக நடித்தார். இதன்பிறகு மும்தாஜின் தயாரிப்பில் வெளியான தத்தி தாவுது மனசு (2003), என்னவோ புடிச்சிருக்கு (2004) போன்ற படங்களில் முன்னணி வேடங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றார். இரண்டு படங்களும் குறைந்த வரவேற்பையே பெற்றன. கிராமத்து பெண் மற்றும் கல்லூரி மாணவி என மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், சிந்துரியால் பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற முடியவில்லை. [1] இவரது பிந்தைய படங்களான சூப்பர் டா (2004) மற்றும் நிறம் ஆகியவையும் இவரை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தத் தவறிவிட்டன. இந்த காலகட்டத்தில் இவர் உணர்ச்சிகள் (2006) படத்திலும் நடித்தார். ஆனால் இறுதியில் அக்காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த கண்ணமாபேட்டை மற்றும் வசீகரனுக்கு ஜோடியாக பூக்கள் உள்ளிட்ட பிற படங்கள் தயாரிப்புப் பணியின்போது இடையில் நிறுத்தப்பட்டன. [2]

இயக்குனர் அலிக்கு ஜோடியாக தெலுங்கு நகைச்சுவை வெற்றிப் படமான குண்டம்மா காரி மனவாடு (2007) படத்தில் நடித்தார். இந்த படம் முன்னணி பாத்திரத்தில் நடித்த இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இவர் மலையாளத் திரையுலகிலும் நுழைந்தார், ஷாம்பு, முதலில் 2004 இல் படமாக்கப்பட்டது, 2008 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [3] 2008 திசம்பரில், சிந்துரி தமிழ் படங்களில் அதிகமான படங்களில் நடிக்க ஆர்வுமுள்ளதை வெளிப்படுத்தினார் மேலும் கவர்ச்சியான ஒளிப்படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார். அதே நேரத்தில் குத்தாட்ட பாடல்களில் இடம்பெறுவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். [4]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் அங்கிதா தமிழ்
தத்தி தாவுது மனசு அமுதா தமிழ்
2004 என்னவோ புடிச்சிருக்கு சங்கீதா தமிழ்
சூப்பர் டா மீனாட்சி தமிழ்
2007 குண்டம்மா காரி மனவாடு மகாலட்சுமி தெலுங்கு
நிறம் ஸ்வேதா தமிழ்
2008 ஷம்பு அபர்ணா மலையாளம்
2013 காதல் கிளுகிளுப்பு உமா மகேஸ்வரி தமிழ்
2019 பூமராங் சக்தியின் நண்பர் தமிழ்
2019 எனை நோக்கி பாயும் தோட்டா சரண்யா தமிழ்

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=சிந்தூரி_(நடிகை)&oldid=22741" இருந்து மீள்விக்கப்பட்டது