கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் (Puliakulam Munthi Vinayagar Temple) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோவை, புலியகுளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அருள் மிகு முந்தி விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும்.[1][2] இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது.[3] இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும்.[4] இது 1998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
புலியகுளம் விநாயகர் கோயில் Puliakualm Vinayagar Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
அமைவு: | புலியகுளம், கோயம்புத்தூர் |
ஆள்கூறுகள்: | 11°00′15.2″N 76°59′34.8″E / 11.004222°N 76.993000°ECoordinates: 11°00′15.2″N 76°59′34.8″E / 11.004222°N 76.993000°E |
கோயில் தகவல்கள் |
மேற்கோள்கள்
- ↑ "Puliakulam temple background". The Tamil Samayam. 13 September 2018. https://tamil.samayam.com/religion/tamil-festivals/people-visit-puliakulams-vinayagar-temple-on-the-occasion-of-ganesh-chaturthi-to-coimbatore/articleshow/65795069.cms.
- ↑ "Puliakulam temple history". The Times of India. 24 October 2013. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/sharing-screenspace-with-history/articleshow/26281781.cms.
- ↑ "Puliakulam temple history". Dinamalar. 30 July 2010. https://m.dinamalar.com/detail.php?id=50778.
- ↑ "ஆசியாவிலேயே மிகப் பெரிய புலியகுளம் முந்தி விநாயகர் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.