கே. எம். செரியன் (பத்திரிகையாளர்)
கண்டத்தில் மம்மன் மாப்பிள்ளை செரியன் | |
---|---|
பிறப்பு | கோட்டயம், கேரளம், இந்தியா | 28 பெப்ரவரி 1897
இறப்பு | 15 மார்ச்சு 1973 கோட்டயம் | (அகவை 76)
கல்லறை | புத்தன்பள்ளி கல்லறை, கோட்டயம் |
பணி | ஊடகவியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1935–1973 |
பெற்றோர் | கே. சி. மம்மன் மாப்பிள்ளை குஞ்சதம்மா |
வாழ்க்கைத் துணை | அன்னம்மா |
பிள்ளைகள் | கே. சி. மம்மன், செரியன் சரசு |
விருதுகள் | பத்ம பூசண் பத்மசிறீ செவாலியே |
கண்டத்தில் மம்மன் செரியன் (Kandathil Mammen Cherian, 28 பிப்ரவரி, 1897 - 15 மார்ச், 1973) என்பவர் ஓர் இந்திய ஊடக நபர் ஆவார். இவர் மலையாள நாளேடான மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக இருந்தபோது, மலையாளத்தில் விற்பனையில் முதல் இடத்தையும்,[1] இந்தியாவில் நான்காவது இடத்தையும் பெற்றது.[2] மேலும் புழக்கத்தின் அடிப்படையில் உலகின் பதினொன்றாவது இடத்தையும் பெற்றது.[3] இவர் பத்ம பூசண், பத்மசிறீ,[4] போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
சுயசரிதை
கே. எம். செரியன் 1897 பிப்ரவரி 28 அன்று [5] கேரளாவில் செய்தித்தாள் கலாச்சாரத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.சி.மம்மன் மாப்பிள்ளைக்கு, தனது ஒன்பது உடன்பிறப்புகளில் மூத்தவராக, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பிறந்தார். [6] இவரது பள்ளிப்படிப்பு உள்ளூர் பள்ளிகளில் இருந்தது. பின்னர் இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் 15 ஆண்டுகள் கற்பித்தல் வாழ்க்கையைத் தொடர்ந்தார். இடையில், இவர் சரம்மா என்பவரை மணந்தார். குடும்பம் தொடர்ந்து சென்னையில் வசித்து வந்தது. அடுத்த நடவடிக்கையாக சென்னையில் இவரது தந்தை 1935 இல் தொடங்கிய தி நியூ கார்டியன் ஆஃப் இந்தியா இன்சூரன்ஸ் என்ற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மேலாளராக சேர்ந்தார்.
பத்திரிக்கை வாழ்க்கை
இவரது தந்தை, மாமன், ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டபோது, அப்போதைய திருவிதாங்கூர் திவான் சர் சி.பி.ராமசாமி ஐயருடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செரியன் கேரளாவுக்கு திரும்ப வேண்டியிருந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை நிர்வகிப்பதற்கும், அப்போது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்த மலையாள மனோரமாவை கவனித்துக்கொள்வதற்கும் கோட்டயத்தில் உள்ள தனது குடும்பத்துடன் சேர்ந்தார். [7] செரியன் கடினமான நேரத்தில் ஏற்பட்ட அனைத்து குடும்பக் கடன்களையும் சமாளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏலத்திலிருந்த மலையாள மனோரமாவை மீட்டார். செரியனின் மனைவி அன்னம்மா 1946 இல் இறந்தார். [5]
1947 இல் மலையாள மனோரமா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, செரியன் தனது தந்தையுடன் மனோரமாவின் நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர், 1953 ஆம் ஆண்டில் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரானார். [6] மலையாள மனோரமாவின் தலைவராக இருந்த காலத்தில், தினசரியும், அதன் இணை வெளியீடுகளான மலையாள மனோரமா வீக்லி, பலராமா ஆகியவை புழக்கத்தில் உயர்ந்தன. [5] [8]
பதவிகள்
செரியன் தனது வாழ்நாளில் பல்வேறு நிறுவன பதவிகளை வகித்தார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, இந்திய மற்றும் கிழக்கு செய்தித்தாள் சங்கம், திருவிதாங்கூர் பார்வர்ட் வங்கி ஆகியவற்றின் தலைவராக இருந்தார். [5] கேரள செய்தித்தாள் உரிமையாளர்கள் சங்கம், கோட்டயம் சேம்பர் ஆப் காமர்ஸ், எலும்பியல் மற்றும் தொழில்நுட்ப மையம், கோட்டயத்தில் உள்ள பால் வழங்கும் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவராக இருந்தார். ஆலுவா ஒன்றியக் கிறித்துவக் கல்லூரி, மார் அதனாசியசு கல்லூரி, கோத்தமங்கலம், திருமூலபுரம் பள்ளிகமட்டம் உயர்நிலைப்பள்ளி போன்ற மூன்று கல்வி நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
இறப்பு
கே.எம்.செரியன் 1973 15 மார்ச் [5] [9] தனது 76 வயதில் கோட்டயத்தில் இறந்தார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். [6] இவருக்குப் பிறகு இவரது தம்பி கே.எம். மேத்யூ பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
அந்தியோகியா, அனைத்து கிழக்கின் தேசபக்தரிடமிருந்து செவாலியே பட்டத்தைப் பெற்ற கே.எம்.செரியனுக்கு [5] 1965 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4] [6] 1971 இல் இவர் மீண்டும் குடியரசு தின கௌரவப் பட்டியலில் இடம் பெற்று பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Afaqs". Afaqs. 2014 இம் மூலத்தில் இருந்து 10 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150710130841/http://www.afaqs.com/news/story/27032_IRS-2010-Q1:-Dailies-in-Kerala-lose-readers-after-gaining-in-the-last-round.
- ↑ "Indian Readership Survey (IRS)". Hansaresearch.com இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125025135/http://www.hansaresearch.com/about_irs.asp.
- ↑ "11th in the world". IFABC. 2014. http://www.ifabc.org/site/assets/media/National-Newspapers_total-circulation_IFABC_17-01-13.xls.
- ↑ 4.0 4.1 "Padma Shri". Padma Shri. 2014 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Kandathil Kudumbam". Kandathil Kudumbam. 2014 இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002140324/http://kandathilkudumbam.com/downloads/Chapter_9.pdf.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "KC Mammen Mappilai". KC Mammen Mappilai. 2014 இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141013102457/http://koti.netplaza.fi/~jmatthan/granddad.html.
- ↑ "Manorama Online". Manorama Online. 2014 இம் மூலத்தில் இருந்து 12 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141112095931/http://m.manoramaonline.com/mmonline/mm/common/aboutus.jsp?id=rs&ft=efnt=small&fnt=medium.
- ↑ India’s Newspaper Revolution: Capitalism, Politics and the Indian-language Press. Oxford University Press. http://www.oup.co.in/product/oxford-india-paperback/politics/media-studies/230/indias-newspaper-revolution-capitalism-politics-indian-language-pressthird-edition/9780198065463.
- ↑ "The Hindu". The Hindu. 1 August 2010. http://www.thehindu.com/news/national/kerala/km-mathew-doyen-of-malayalam-journalism/article546228.ece.