குன்னங்கேரில் குருவிள ஜேக்கப்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
குன்னங்கேரில் குருவிள ஜேக்கப் |
---|
குன்னங்கேரில் குருவிள ஜேக்கப் (Kunnenkeril Kuruvila Jacob) என்பவர் (1904-1991) கேரளத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார்.[1] இவர் 1904 ஆகத்து 3 அன்று கோட்டையம் மாவட்டத்தில் அய்மனம் என்னும் சிற்றூரில் பிறந்தவர், கோட்டையம், திருவனந்தபுரம், நாகர்கோயில், பாரூர் போன்ற இடங்களில் கல்வி பயின்றார். இவர் தன் உயர்கல்வியை இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[2] இவர் சென்னையில் எம். சி. சி. மேல்நிலைப் பள்ளியின் முதல் இந்தியத் தலைமையாசிரியராக 1931-ஆம் ஆண்டில் தனது 27 வயதில் பொறுப்பேற்று, 1962இல் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார்.[3][4] ஓய்வுபெற்ற பிறகு, ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் பொதுப் பள்ளியில் ஏழு ஆண்டுகளும், பின்னர் மகாராட்டிரத்தில் மும்பையில் உள்ள கதீட்ரல் அண்டு ஜான் கேனன் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றினார். இவர் 1991 ஆகத்து 25 அன்று இறந்தார்.[5] இவர் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் இவர் பணிபுரிந்த பள்ளிகள் அனைத்தும் பின்தங்கிய நிலையிலே இருந்தன. பின்னர் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையாலும் சமூக அக்கறையாலும் அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக வளர்த்தெடுத்தார்.[6] இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[7] ஜேக்கப்பின் முன்னாள் மாணவர்கள் அவரை நினைவுகூரும் வகையில் பள்ளிக் கல்வியை ஆகச்சிறந்த முறையில் மேம்படுத்தும் முனைப்போடு இவரது பெயரில் குருவிள ஜேக்கப் முயற்சிகள் (Kuruvila Jacob Initiative) என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ Muthaiah S. (2011). Madras Miscellany. Westland. பக். 1212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380032849 இம் மூலத்தில் இருந்து 2016-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160323014226/https://books.google.ae/books?id=QHtZG8beGy4C&pg=PT267&lpg=PT267&dq=Kunnenkeril+Kuruvila+Jacob&source=bl&ots=GlicFLTiR7&sig=BYAO34c2oLWMeSOObD3bJ89xAQ4&hl=en&sa=X&ei=BkCgVNmbK8nxapvzgBg&redir_esc=y#v=onepage&q=Kunnenkeril%20Kuruvila%20Jacob&f=false. பார்த்த நாள்: 2018-08-15.
- ↑ "மனிதன்". குருவிள ஜேக்கப். 2014 இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150102182001/http://www.kuruvilajacob.com/theman.htm. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2014.
- ↑ "எம். சி. சி.". குருவிள ஜேக்கப். 2014 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303211825/http://www.kuruvilajacob.com/atmcc.htm. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2014.
- ↑ "IITM". IITM. 2014 இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228192845/http://tfore.iitm.ac.in/about.html. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2014.
- ↑ "பிற்கால வருடங்கள்". குருவிள ஜேக்கப். 2014 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303220100/http://www.kuruvilajacob.com/lateryears.htm. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2014.
- ↑ ம.சுசித்ரா (14 ஆகத்து 2018). "ஆசிரியர்க்கெல்லாம் தலைமகன்". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/general/education/article24680198.ece. பார்த்த நாள்: 15 ஆகத்து 2018.
- ↑ "Padma Awards". பத்மா விருதுகள். 2014 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 11 நவம்பர் 2014.