குட்ட பரிந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராசராட்டிரப் பாண்டியரின் கீழ் வட இலங்கை (நீல நிறம்) கி.பி. 436 - 463
இராசராட்டிரம்
வம்சம் பாண்டியர்
நாடு இராசராட்டிரம்
எல்லை மகாவலி கங்கை ஆறு (தெற்கெல்லை) மற்ற திசைகளில் கடல்
தலைநகரம் அநுராதபுரம்
இராசராட்டிரப் பாண்டியர்களின் பட்டியல்
பாண்டு (பாண்டியன்) பொ.பி. 436 - 441
பரிந்தன் பொ.பி. 441 - 444
இளம் பரிந்தன் பொ.பி. 444 - 460
திரிதரன் பொ.பி. 460
தாட்டியன் பொ.பி. 460 - 463
பிட்டியன் பொ.பி. 463

குட்ட பரிந்தன் அல்லது இளம் பரிந்தன் அல்லது புத்ததாசன் என்பவன் களப்பிரர் காலத்தில் இலங்கையை ஆண்ட இராசராட்டிரப் பாண்டியர்களுள் மூன்றாமவனாவான். இவன் பரிந்தன் (பொ.பி. 441 - 444) என்ற இராசராட்டிரப் பாண்டியர்களுள் இரண்டாமவனின் ஆட்சிக்குப் பிறகு ஆண்டவன். இவன் பரிந்தனின் தம்பியாதலால் இளம்பரிந்தன் என்று அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியில் தாதுசேனன் என்ற உரோகணம் நாட்டு அரசன் இராசராட்டிரத்திற்கு படையெடுத்து வந்து தோல்வியுற்றான்.[1]

கல்வெட்டு

அநுராதபுரம் நகரிலுள்ள இவனுடைய கல்வெட்டுகள் தற்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவில் காணப்படுகின்றன. அக்கல்வெட்டின் படி புத்த சமயத்தை சேர்ந்தவன் என்றும் இவனுடைய மனைவி புத்த விகாரை ஒன்றுக்கு தானம் செய்ததையும் அறிய முடிகிறது.[2]

மூல நூல்கள்

  • களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
  • சூல வம்சம்

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 38ஆம் பரிச்சேதம், 30-31
  2. Epigraphia Zeylonica, Vol 4, PP 111 - 115
"https://tamilar.wiki/index.php?title=குட்ட_பரிந்தன்&oldid=42125" இருந்து மீள்விக்கப்பட்டது