கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் (பிறப்பு;18 பிப்ரவரி 1992) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார். இவர்தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கீர்த்தி பாண்டியன்
பிறந்ததிகதி 18 February 1992 (1992-02-18) (வயது 32)
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி திரைப்பட நடிகை
கல்வி நிலையம் செட்டிநாடு வித்யாஷ்ரம்
செயற்பட்ட ஆண்டுகள் 2019ம் ஆண்டு முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 2019ம் ஆண்டு முதல்

2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற சாகசப் படத்தில் அறிமுகமான இவர் இயக்குனர் கோகுல் இயக்கிய தப்பிப்பிழைக்கும் வகை திரைப்படமான அன்பிற்கினியாளில் (2021) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியானபாராட்டைப் பெற்றுள்ளார். கீர்த்தி பாண்டியன் தும்பாவில் முன்னணி நடிகையாக நடித்த பிறகு ஃபெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

கீர்த்தி பாண்டியன், 18 பிப்ரவரி 1992 அன்று சென்னையில் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்துள்ளார்.[1] இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர்,[2] இவரது பெரியப்பா மகளான (அக்கா) ரம்யா பாண்டியனும், தமிழ் நடிகையே.[3] கீர்த்தி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் படித்துள்ளார்.[1]

திரைவாழ்க்கை

2015–2018

பட்டம் பெற்ற பிறகு, பாண்டியன் பாலே மற்றும் சல்சா வகை நடனக் கலைஞராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார், பின்னர் 2015 ம் ஆண்டு நாடக நடிப்புக்கு மாறினார். இவரது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான ஏ&பி குரூப்ஸின் தலைமை இயக்குனராகவும் இருந்த அதே நேரத்தில் சிங்கப்பூரில் இவரது சொந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார்.[4][5][6] இவரின் நிறம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் பல்வேறு இயக்குநர்களால், நிராகரிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை பிடிக்காமல் இவரும் பல படங்களை நிராகரித்துள்ளார்.[7][8][9][10][11][12]

2019–தற்போது

கீர்த்தியை இயக்குனர் ஹரிஷ் ராம் அணுகி, தும்பா (2019) படத்தில் அவருக்கு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பளித்து அதன்படி, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.[13][14][15] மலையாளத் திரைப்படமான ஹெலனின் (2019) தமிழ் பதிப்பான அன்பிற்கினியாள் (2021) என்ற படத்தில் தனது தந்தையுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[16][17][18] அதைத்தொடர்ந்து ZEE5 இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை இணையத் தொடரிலும் நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து நடித்துள்ளார்.[19] கொஞ்சம் பேசினால் என்ன மற்றும் கண்ணகி ஆகியவை கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் அடங்கும்.[20][21]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

முக்கிய குறிப்பு
  இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் பங்கு
2019 தும்பா வர்ஷா குமரன்
2021 அன்பிற்கினியாள் அன்பிற்கினியாள் சிவம் (அன்பு)
கொஞ்சம் பேசினால் என்ன சஞ்சனா
கண்ணகி அறிவிக்கப்படும்

தொலைக்காட்சி

ஆண்டு திரைப்படம் பங்கு ஸ்ட்ரீமிங் சேனல்
2019 தபால்காரர் ராகினி ZEE5

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது வகை திரைப்படம் விளைவாக பங்கு
2019 ஃபெமினா விருதுகள் ஃபெமினா சூப்பர் மகள் தும்பா Won வர்ஷா [22]
2021 ஜீ சினி விருதுகள் தமிழ் சிறந்த பெண் அறிமுகம் Nominated
விகடன் விருதுகள்
எடிசன் விருதுகள் தமிழ்
2022 SIIMA சிறந்த நடிகைக்கான தமிழ் விருது அன்பிற்கினியாள் Nominated அன்பிற்கினியாள் சிவம் (அன்பு)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Actress Keerthi Pandian" இம் மூலத்தில் இருந்து 10 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210910062522/https://nettv4u.com/celebrity/tamil/movie-actress/keerthi-pandian. 
  2. "Helen Tamil remake titled Anbirkiniyal". 15 February 2021 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716103008/https://www.cinemaexpress.com/stories/news/2021/feb/15/helen-tamil-remake-tiled-anbirkiniyal-22841.html. 
  3. "Bigg Boss Tamil 4 contestant Ramya Pandian's profile, photos and everything you need to know". 4 October 2020 இம் மூலத்தில் இருந்து 22 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201222114923/https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-4-contestant-ramya-pandians-profile-photos-and-everything-you-need-to-know/articleshow/78475005.cms. 
  4. "Keerthi Pandian On Why It's Important To Understand The Business Of Films". 2 March 2021 இம் மூலத்தில் இருந்து 4 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210404033027/https://www.filmcompanion.in/interviews/tamil-interview/anbirkiniyal-tamil-movie-keerthi-pandian-on-why-its-important-to-understand-the-business-of-films/. 
  5. "On Stage" இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921180314/https://keerthipandian.com/on-stage/. 
  6. "A&P Groups" இம் மூலத்தில் இருந்து 15 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211015103510/https://www.indiamart.com/ap-groups/aboutus.html. 
  7. "Keerthi Pandian gets emotional on stage, reveals being body shamed!". 18 June 2019 இம் மூலத்தில் இருந்து 20 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210920213056/https://www.indiaglitz.com/keerthi-pandian-emotionally-cries-in-thumbaa-pressmeet--tamil-news-238487. 
  8. Balachandran, Logesh (18 August 2021). "People are more accepting of dark skin tones now: Keerthi Pandian" இம் மூலத்தில் இருந்து 8 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210908094201/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/people-are-more-accepting-of-dark-skin-tones-now-keerthi-pandian/articleshow/85403250.cms. 
  9. "Keerthi Pandian reveals that she was body shamed by directors". 19 June 2019 இம் மூலத்தில் இருந்து 8 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210908094159/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/keerthi-pandian-reveals-that-she-was-body-shamed-by-directors/articleshow/69855299.cms. 
  10. "I will outshine as a performer, not just as heroine: Keerthi Pandian". 19 February 2019 இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921014905/https://newstodaynet.com/index.php/2019/02/19/i-will-outshine-as-a-performer-not-just-as-heroine-keerthi-pandian/. 
  11. "Another dad-daughter duo to hit the silver screen". 9 February 2020 இம் மூலத்தில் இருந்து 30 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210930131308/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/090220/another-dad-daughter-duo-to-hit-the-silver-screen.html. 
  12. "Humans are the worst creatures on the planet: Keerthi Pandian". 23 June 2019 இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921003359/https://www.cinemaexpress.com/stories/interviews/2019/jun/23/we-are-the-worst-creatures-in-the-planet-keerthi-pandian-12482.html. 
  13. "Keerthi Pandian debuts in fantasy adventure". 23 June 2019 இம் மூலத்தில் இருந்து 20 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210920213139/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/200219/keerthi-pandian-debuts-in-fantasy-adventure.html. 
  14. S, Srivatsan (20 February 2019). "'Thumbaa' was an instinctive yes, says Keerthi Pandian" இம் மூலத்தில் இருந்து 8 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210908094157/https://www.thehindu.com/entertainment/movies/keerthi-pandian-talks-about-thumbaa/article28133166.ece. 
  15. "Arun Pandian's daughter Keerthi makes her film debut". 18 February 2019 இம் மூலத்தில் இருந்து 8 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210908094157/https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/feb/18/keerthi-pandian-makes-her-film-debut-1940075.html. 
  16. "Keerthi Pandian signs her second film in Tamil". 8 February 2020 இம் மூலத்தில் இருந்து 4 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210404125047/https://www.dtnext.in/News/Cinema/2020/02/08001612/1213875/Keerthi-Pandian-signs-her-second-film-in-Tamil.vpf. 
  17. "Arun Pandian and daughter Keerthi's film titled Anbirkiniyal". 16 February 2021 இம் மூலத்தில் இருந்து 17 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210917091811/https://www.dtnext.in/News/Cinema/2021/02/16002505/1276198/Arun-Pandian-and-daughter-Keerthis-film-titled-Anbirkiniyal.vpf. 
  18. "5 fantastic thrillers from South India that you can binge watch". 16 July 2021 இம் மூலத்தில் இருந்து 21 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210921145952/https://telanganatoday.com/5-fantastic-thrillers-from-south-india-that-you-can-binge-watch. 
  19. "Web series 'Postman' delivers promising entertainment". 26 June 2019 இம் மூலத்தில் இருந்து 10 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210910062037/https://www.dnaindia.com/entertainment/report-here-s-what-zee5-original-postman-starring-munishkanth-and-keerthi-pandian-is-all-about-2765385. 
  20. "First look of Keerthi Pandian's 'Kannagi' out". 17 August 2021 இம் மூலத்தில் இருந்து 8 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210908094201/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/aug/17/first-look-of-keerthipandians-kannagiout-2345590.html. 
  21. "First look of Vinoth Kishan & Keerthi Pandian film". 5 May 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/first-look-of-vinoth-kishan-keerthi-pandian-film/articleshow/91336324.cms. 
  22. "Femina Super Daughter Awards 2019 recognizes and honors prominent parent-daughter duos". 27 November 2019 இம் மூலத்தில் இருந்து 18 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210918034927/https://moviegalleri.net/2019/11/femina-super-daughter-awards-2019-recognizes-and-honors-prominent-parent-daughter-duos.html. 
"https://tamilar.wiki/index.php?title=கீர்த்தி_பாண்டியன்&oldid=22580" இருந்து மீள்விக்கப்பட்டது