கலா நிலையம் ராஜகோபால்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலா நிலையம் ராஜகோபால் தமிழ்நாட்டின் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர். சிறந்த இதழியலாளராகவும் உரையாசிரியராகவும் படைப்பாளராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.
பிறப்பு
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கிருஷ்ணமாச்சாரி, ஜானகி இணையருக்கு மகனாய் 15.3.1897 அன்று பிறந்தார். தஞ்சைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்ற இவர் பட்டப்படிப்பை சென்னையில் முடித்தார்.
பணி
செல்வ வளம்மிக்கவராகத் திகழ்ந்த இவர் பணிக்கு ஏதும் செல்லாமல் செல்வம் அனைத்தையும் தமிழுக்காகவே செலவழித்து மகிழ்ந்தார். முழுநேரத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
குடும்ப வாழ்வு
இவரது துணைவியார் பெயர் ரங்கநாயகி. மக்கள் மூவர். மைதிலி, கிருஷ்ணன், மாதவன் ஆகியோர். தமது மனைவி 24 வயதில் மறைந்த போதும் மறுமணம் புரிந்து கொள்ளாது தமிழுக்குத் தொண்டு புரிந்து வாழ்ந்துள்ளார்.
தமிழ்த்தொண்டு
32 நூல்கள்
- வில்லிபாரத உரை 3 பகுதிகள்
- இலக்கண விளக்கம்
(எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல்) (1962, ஸ்டார் பிரசுரம்)
- புகழேந்திப்புலவர் வாழ்க்கை வரலாற்று நூல்
- ஜூலியஸ் சீசர் வாழ்க்கை வரலாற்று நூல்
- பிளாட்டோவின் குடிவாழ்க்கை (மொழிபெயர்ப்பு)
- நெஞ்சில் முதிர்ந்த கனி (நாவல்)
- வாளும் வனிதையரும் (நாவல்)
- கானல் வரி
இதழியல் பணி
கலாநிலையம் எனும் வார இதழை டி. என். சேஷாசல அய்யரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினார்.
பாராட்டும் விருதும்
15.1.79 ல் தமிழக அரசு செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
மறைவு
5-9-1983 ல் மறைந்தார்