கதிர் (இயக்குநர்)
கதிர் | |
---|---|
பிறப்பு | திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1991 – தற்போது |
வாழ்க்கைத் துணை | சாந்திநிதேவி |
கதிர் (Kathir) இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை
கதிர் இந்தியாவின் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் வட்டத்திலுள்ள கல்கரை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். கதிர் தனது மூன்று சகோதரிகளுடன் ஒரே மகனாக நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை சுபாசு ஒரு விவசாயி, தாய் இசக்கியம்மாள் இவரது தந்தையின் விவசாயத்திற்கு உதவினார். கதிர் தனது தொடக்கப் பள்ளியை கல்கரை கிறித்துவத் தொடக்கப் பள்ளியில் பயின்றார். தனது 5 ஆம் வகுப்பை அங்கேயே முடித்து, வடக்கங்குளம், நேரு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு தனது 8 ஆம் வகுப்பை முடித்த பின்னர், வடக்கங்குளத்தின் கான்கார்டியா உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் ஓராண்டு மட்டுமே படித்தார். பின்னர் வடக்கங்குளத்தில் உள்ள புனித தெரசா பள்ளியில் சேர்ந்து தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கதிர் சென்னை நுண்கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் சேர்ந்தார். நுண்கலைகளில் ஐந்தாண்டுப் படிப்பு படித்த இவர், நுண்கலை சான்றிதழ் பட்டம் பெற்றார்.
தொழில்
கதிர் மூன்றாம் பிறை (1981), அந்த 7 நாட்கள் (1981), டார்லிங், டார்லிங், டார்லிங் (1982) மற்றும் மணிரத்னத்தின் பகல் நிலவு (1985) போன்ற திரைப்படங்களில் திரைத் துறையில் ஒரு சுவரொட்டி வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே தனது கைச்செலவுக்கு இந்தப் பணியைச் செய்தார்.
பாண்டியராஜன், ஜி. எம். குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 2001 இல், இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "சவுண்ட் லைட் சுடுடியோ"வை நிறுவினார். இதன் மூலம் இவர் காதல் வைரஸ் என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்தார். 1996 இல், காதல் தேசம் பாக்ஸ் ஆபிஸில் ₹ 10 கோடி வசூல் செய்ததில் இவரது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருவெடுத்தது. கதிர், "திரைக்கதை" எழுதி 1997 இல் ஐலவ்யூ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கத் தயாரானார். படத்தைத் தயாரிக்க முடியாமல் போனதால், இவர் இந்த முயற்சியைத் தவிர்த்தார். 1999 இன் பிற்பகுதியில் "பெங்களூரு" என்ற தலைப்பில் ஒரு திட்டத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகளை சுருக்கமாகத் தொடங்கினார்.
கதிர் 2008இல் திரைத்துறையில் மறுபடியும் நுழைந்து வினய் முன்னணி பாத்திரத்தில் நடிக்க "மாணவர் தினம்" என்ற தலைப்பில் ஒரு திரைப்படப்பணி தொடங்கியது. காலதாமதத்தைத் தொடர்ந்து, வினய் நடிகருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். மேலும் 2009 ஆம் ஆண்டில் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனத்தால் இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், படம் பின்னர் நிறுத்தப்பட்டது. மேலும் இருவரும் சேர்ந்து "கோடை விடுமுறை" என்ற புதிய முயற்சியில் ஈடுபட்டனர். ஷாம் நடித்த படத்தில் நடிகர்கள், திரைப்பட வேலைகளில் மாற்றம் ஏற்பட்டது. சூலை 2012 இல் மீண்டும் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
குடும்ப வாழ்க்கை
இவர் 2013 இல் சாந்திநிதேவியை மணந்தார்.
திரைப்படப் பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | பங்களிப்பு | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | ||||
1991 | இதயம் | தமிழ் | ||||
1993 | உழவன் | தமிழ் | ||||
1996 | காதல் தேசம் | தமிழ் | ||||
1999 | காதலர் தினம் | தமிழ் | இந்தியில்தில் கி தில் மேய்ன் என்ற தலைப்பில் பாதிப்படப்பிடிப்பு. | |||
2002 | காதல் வைரஸ் | தமிழ் | ||||
2016 | நான் லவ் டிரேக் | கன்னடம் |
மேற்கோள்கள்
- ↑ "Gokul's Tamil Cinema News". http://www.oocities.org/hollywood/lot/2330/gcnnov99.html.
- ↑ "dinakaran" இம் மூலத்தில் இருந்து 31 May 2000 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000531144715/http://www.dinakaran.com/cinema/english/interviews/06-03-99/kathir.htm.
- ↑ "Kathir's Biography" இம் மூலத்தில் இருந்து 29 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529051328/http://kathir.net/bio.html.