எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ்.இராமச்சந்திரன்
பிறப்பு1 ஜனவரி,1953
சென்னை,தமிழ் நாடு

எஸ். இராமச்சந்திரன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரும் கல்வெட்டறிஞரும் ஆவார். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர்.[1] இவர் சென்னையில் பிறந்தவர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பள்ளியிலும். மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பும் , சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டப்படிப்பும் பயின்றவர். பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் , தொல்லியல்-கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பயின்று அத்துறையிலேயே 27 ஆண்டுகள் பணியாற்றியவர்.2005ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வரலாற்றாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்