இருஹானி சர்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இருஹானி சர்மா
பிறப்புசோலன், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது வரை

இருஹானி சர்மா (Ruhani Sharma) ஓர் இந்திய நடிகையும் வடிவகியும் ஆவார், இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சி லா சௌவ் (2018) என்ற காதல் படத்தில் நடித்ததற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார்.[1]

தொழில்

இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் பிறந்து வளர்ந்தார்.[2] சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2013இல் முதன்முதலில் பஞ்சாபி இசைத் தொகுப்புக்களான "கிளாஸ்ரூம்", "குடி து படகா" ஆகியவற்றில் தோன்றினார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் "கடைசி பெஞ்ச் கார்த்தி" படத்தில் அறிமுகமானார். 2018இல் ராகுல் ரவீந்திரன் இயக்கிய சி லா சௌ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவரது நடிப்பு நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.[3] 2019இல் ரஞ்சித் சங்கர் எழுதி இயக்கிய கமலா என்ற மலையாள திகிலூட்டும் படத்தில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Ruhani Sharma
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=இருஹானி_சர்மா&oldid=22421" இருந்து மீள்விக்கப்பட்டது