2025
2025 ஆம் ஆண்டு (MMXXV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2025-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 25-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 25-ஆவது ஆண்டும், 2020களின் ஆறாவது ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2025 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2025 MMXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 2056 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2778 |
அர்மீனிய நாட்காட்டி | 1474 ԹՎ ՌՆՀԴ |
சீன நாட்காட்டி | 4721-4722 |
எபிரேய நாட்காட்டி | 5784-5785 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2080-2081 1947-1948 5126-5127 |
இரானிய நாட்காட்டி | 1403-1404 |
இசுலாமிய நாட்காட்டி | 1446 – 1447 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 37 (平成37年) |
வட கொரிய நாட்காட்டி | 114 |
ரூனிக் நாட்காட்டி | 2275 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4358 |
நிகழ்வுகள் - சனவரி
- சனவரி 1
- ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் தலைமைப் பொறுப்பை அங்கேரிக்குப் பின்னர் போலந்து எடுத்துக் கொண்டது.[1]
- பல்காரியாவும் உருமேனியாவும் செங்கன் பகுதியில் இணைவதற்கான செயல்முறையை முடித்து, நில எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கின.[2]
- ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய 37-ஆவது நாடாக லீக்கின்ஸ்டைன் மாறியது.[3]
- சனவரி 6
- இந்தோனேசியா பிரிக்சு அமைப்பின் 10-ஆவது உறுப்பினராக இணைந்தது.[4][5]
- சனவரி 7
- 7.1 அளவு நிலநடுக்கம் திபெத்தைத் தாக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.[6]
- லாசு ஏஞ்சலசில் அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட காட்டுத்தீ பரவியதில், ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஏழு இறப்புகள் பதிவாகின.[7]
இறப்புகள்
- சனவரி 9 – பி. ஜெயச்சந்திரன், பின்னணிப் பாடகர் (பி. 1944)
மேற்கோள்கள்
- ↑ "PM Donald Tusk at the opening of the presidency: Europe is lucky(Donald Tusk na inauguracji prezydencji: Europa ma szczęście)". 3 January 2025. https://tvn24.pl/polska/polska-prezydencja-w-radzie-unii-europejskiej-oficjalna-inauguracja-przemowienie-premiera-donalda-tuska-st8245824.
- ↑ "Borders open: Bulgaria and Romania celebrate joining Schengen Area". Euronews. 1 January 2025. பார்க்கப்பட்ட நாள் 1 January 2025.
- ↑ "Liechtenstein legalizes same-sex marriage in near-unanimous vote". Politico. 17 May 2024. Archived from the original on January 1, 2025. பார்க்கப்பட்ட நாள் 1 January 2025.
- ↑ "Indonesia joins BRICS group of emerging economies". Al Jazeera (in English). பார்க்கப்பட்ட நாள் 2025-01-09.
- ↑ "Indonesia is admitted to the BRICS bloc of developing nations". AP News (in English). 2025-01-06. பார்க்கப்பட்ட நாள் 2025-01-09.
- ↑ "China earthquake: Dozens dead as tremor strikes Tibet". BBC News. 7 January 2025. https://www.bbc.co.uk/news/articles/c3rqg95n9n1o.
- ↑ "Los Angeles wildfires approach Hollywood sign, with Sunset Boulevard 'in ruins'". BBC News (BBC News). 7 January 2025. https://www.bbc.co.uk/news/live/c5y81zyp1ext. பார்த்த நாள்: 9 January 2025.