2024
2024 ஆம் ஆண்டு (MMXXIV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 24-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 24-ஆவது ஆண்டும், 2020களின் ஐந்தாவது ஆண்டும் ஆகும்
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2024 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2024 MMXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 2055 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2777 |
அர்மீனிய நாட்காட்டி | 1473 ԹՎ ՌՆՀԳ |
சீன நாட்காட்டி | 4720-4721 |
எபிரேய நாட்காட்டி | 5783-5784 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2079-2080 1946-1947 5125-5126 |
இரானிய நாட்காட்டி | 1402-1403 |
இசுலாமிய நாட்காட்டி | 1445 – 1446 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 36 (平成36年) |
வட கொரிய நாட்காட்டி | 113 |
ரூனிக் நாட்காட்டி | 2274 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4357 |
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்
- ஜனவரி 19 - பிப்ரவரி 2 - தென் கொரியாவின் கங்வொனில் 2024 குளிர்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் .
- பிப்ரவரி 1 - முதல் சுற்றில் தேர்தல் முடிவு செய்யப்பட்டால் பின்லாந்தின் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார்.
- பிப்ரவரி 4 - 2024 சால்வடோர் பொதுத் தேர்தல்
- பிப்ரவரி 14 – 2024 இந்தோனேசிய பொதுத் தேர்தல்
- மார்ச் 17 – 2024 உருசிய அரசுத்தலைவர் தேர்தல்
- ஜூலை 7 - மெக்சிகோ அரசுத்தலைவர்க்கான பொதுத் தேர்தல் ; தற்போதைய அரசுத்தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மறுதேர்தலுக்கு தகுதி பெறமாட்டார்.
- ஜூலை 26 - ஆகஸ்ட் 11 - 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், பாரீஸ், பிரான்சில்.[1]
- ஆகஸ்ட் 17 - இந்தோனேசியாவின் புதிய தலைநகராக ஜகார்த்தாவிற்குப் பதிலாக நுசன்தாரா மாறும். [2]
- அக்டோபர் 27 – 2024 உருகுவை பொதுத் தேர்தல் ; தற்போதைய அரசுத்தலைவர் லூயிஸ் லக்கால் போ மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறமாட்டார்.
- நவம்பர் 5 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2024 ; தற்போதைய குடியரசுத் தலைவர் ஜோ பிடன் மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறுவார்.
திகதிகள் தெரியவில்லை
- ஜனவரி - 2024 வங்காளதேசப் பொதுத் தேர்தல் .
- மே – 2024 யூரோவிஷன் பாடல் போட்டி, தளம் தெரியவில்லை.
- 2024 மே நடுப்பகுதி - 2024 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்.
- ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே நடுப்பகுதி வரை 2024 – இந்தியப் பொதுத் தேர்தல், 2024 .
- இலையுதிர் காலம் 2024 - 2024 மல்தோவ குடியரசுத் தலைவர்த் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் மையா சண்டு மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறுவார்.
- நவம்பர் – 2024 உருமேனிய குடியரசுத் தலைவர் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் கிளாசு யோகன்னிசு மறுதேர்தலுக்கு தகுதி பெறமாட்டார்.
குறிப்புகள்
- ↑ Wharton, David. "Los Angeles makes deal to host 2028 Summer Olympics". Los Angeles Times. http://www.latimes.com/sports/sportsnow/la-sp-2028-olympics-deal-20170731-story.html.
- ↑ Faris Mokhtar. "Indonesia Breaks Ground on Nusantara as Jakarta Sinks". Bloomberg. https://www.bloomberg.com/news/articles/2022-08-02/indonesia-breaks-ground-on-nusantara-as-jakarta-sinks.