1949 திருவள்ளுவர் குறள் மாநாடு

திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்."[1]

மேற்கோள்கள்