1,3-டையாக்சேன்

1,3-டையாக்சேன் (1,3-Dioxane) என்பது (CH2)4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா டையாக்சேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். இச்சேர்மத்தின் சிஏஎசு எண் 505-22-6 ஆகும். ஐரோப்பிய சமூக எண் 208-005-1 என்றும் வேதிப் பொருட்களின் நச்சு விளைவுப் பதிவெண் யேகி8224000 என்றும் குறிக்கப்படுகிறது[1]

படிமம்:Dioxane isomers named.PNG
டையாக்சேனின் மூன்று மாற்றியங்கள்
வளையங்களிலுள்ள அணுக்களின் எண்ணிடலை நீல எண்கள் குறிக்கின்றன.

பிரான்சுடெட்டு அல்லது இலூயிசு அமில வினையூக்கி முன்னிலையில் 1,3-புரோப்பேன் டையால் அல்லது 1,2-ஈத்தேன் டையாலுடன் கார்பனைல் சேர்மங்களைச் சேர்த்து 1,3-டையாக்சேன்களும் 1,3-டையாக்சோலேன்களும் தயாரிக்கப்படுகின்றன.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

.

"https://tamilar.wiki/index.php?title=1,3-டையாக்சேன்&oldid=142983" இருந்து மீள்விக்கப்பட்டது