1,2,4-மூவாக்சேன்
1,2,4-மூவாக்சேன் (1,2,4-Trioxane) என்பது மூவாக்சேனின் மாற்றியங்களில் ஒன்றாகும். இது C3H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது. இச்சேர்மம் மூன்று கார்பன் அணுக்கள் மற்றும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் கொண்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வளையத்தைக் கொண்டுள்ளது. இரண்டு அருகில் உள்ள ஆக்சிசன் அணுக்கள் பெராக்சைடு செயல்பாட்டுக் குழுவை உருவாக்குகின்றன, மற்றவை ஈதர் வினைபடுத் தொகுதியை உருவாக்குகின்றன. இது ஒரு வளைய அசிட்டால் போன்றது. ஆனால், அசிட்டால் குழுவில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களில் ஒன்று பெராக்சைடு குழுவால் மாற்றப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,4-மூவாக்சேன் | |||
இனங்காட்டிகள் | |||
7049-17-4 | |||
ChemSpider | 10629025 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 21584057 | ||
| |||
UNII | X5CWB98J7Sவார்ப்புரு:Fdacite | ||
பண்புகள் | |||
C3H6O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 90.08 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2,4-மூவாக்சேன் தனியாகப் பிரித்தெடுக்கப்படவோ அல்லது அதன் பண்புகள் வகைப்படுத்தப்படவோ இல்லை, மாறாக கணக்கீட்டு ரீதியாக மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது சில சிக்கலான கரிமச் சேர்மங்களின் முக்கியமான கட்டமைப்பு உறுப்பாக உள்ளது. இன் மரிக்கொழுந்து தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆர்ட்டெமிசினின் என்ற இயற்கை சேர்மம் மற்றும் சில பகுதி-தொகுப்புமுறை வழிப்பொருள்கள் 1,2,4-மூவாக்சேன் வளையத்தைக் கொண்ட முக்கியமான ஆண்டிமலேரிய மருந்துகளாகும். 1,2,4-மூவாக்சேன் வளையத்தைக் கொண்ட முற்றிலும் தொகுப்புமுறையில் பெறப்பட்ட ஒப்புமைகள் இயற்கையாகவே பெறப்பட்ட ஆர்ட்டெமிசினின்களை விட முக்கியமான சாத்தியமான மேம்பாடுகள் ஆகும். [1] ஆர்ட்டெமிசினின் 1,2,4-மூவாக்சேனின் மையத்தில் உள்ள பெராக்சைடு குழு மலேரியா ஒட்டுண்ணியின் முன்னிலையில் பிளவுபட்டு ஒட்டுண்ணிக்கு தீங்கு விளைவிக்கும் வினையுறு ஆக்சிசன் தனியுறுப்புகளை உருவாக்கி ஒட்டுண்ணிகளை அழிக்க வழிவகுக்கிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ Gary H. Posner; Michael H. Parker; John Northrop; Jeffrey S. Elias; Poonsakdi Ploypradith; Suji Xie; Theresa A. Shapiro (1999). "Orally Active, Hydrolytically Stable, Semisynthetic, Antimalarial Trioxanes in the Artemisinin Family". J. Med. Chem. 42 (2): 300–304. doi:10.1021/jm980529v. பப்மெட்:9925735.
- ↑ Cumming, Jared N.; Ploypradith, Poonsakdi; Gary H. Posner (1997). Antimalarial activity of artemisinin (qinghaosu) and related trioxanes: mechanism(s) of action. Advances in Pharmacology. Vol. 37. pp. 253–297. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s1054-3589(08)60952-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120329380. PMID 8891104.