0கள்
0கள் (0s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் முதலாம் பத்தாண்டைக் குறிக்கும். எனினும் இப்பத்தாண்டு காலத்தின் ஆண்டுகள் எப்போதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஜூலியன் நாட்காட்டியிலோ கிரெகோரியன் நாட்காட்டியிலோ சுழியம் ஆண்டு (0) கிடையாது. எனவே கிபி 1 இற்கு முன்னர் கிமு 1 ஆண்டு இருந்தது.
இக்கட்டுரை கிபி 1–9 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் முதல் 9 ஆண்டுகளைப் பற்றியது.
குறிப்பிடத்தக்கவர்கள்
- பிங் டி, அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிமு 1 – கிபி 5
- ருசி யிங், அரசர் ஆன் அரசமரபு சீனா, ஆண்டது கிபி 6–9
- அர்மினியஸ், செருமானியப் போர் தலைவர்
- அகஸ்ட்டஸ், ரோம அரசர் (கிமு 27 – கிபி 14)
- ஆவிட், ரோமப் புலவர்
- லிவி, ரோம வரலாற்றாசிரியர்