.ac
.ac என்பது அசென்சன் தீவுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.
அறிமுகப்படுத்தப்பட்டது | 1997 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | அசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையம் |
வழங்கும் நிறுவனம் | கேபிள் அன்டு வயர்லெசு (அசென்சன் தீவு) |
பயன்பாட்டு நோக்கம் | அசென்சன் தீவுடன் தொடர்புடைய அமைப்புகள் |
ஆவணங்கள் | கட்டுப்பாடுகள், விதிகள் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.nic.ac |
இந்த ஆள்களப் பெயரை யாரும் பெற முடியும். .acஇற்கான ஆள்களப் பதிவகம் அனைத்துலகமயமாக்கப்பட்ட ஆள்களப் பெயர்களையும் ஏற்றுக் கொள்கின்றது.
இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்
.acஇன் கீழ் ஐந்து இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்ய முடியும்.
- .com.ac-வணிக நிறுவனங்கள்
- .net.ac-வலையமைப்புச் சேவை வழங்குநர்கள்
- .gov.ac-அரசு
- .org.ac-வணிக நோக்கற்ற அமைப்புகள்
- .mil.ac-படை[1]