ஹிஜ்ரா (சிற்றிதழ்)

ஹிஜ்ரா இலங்கையிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.

வெளியீடு

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வெளியீடு

பொருள்

ஹிஜ்ரா என்றால் 'நாட்டைத் துறந்து செல்லல்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

இசுலாமிய வருடம் ஹிஜ்ரி 1400 பிறப்பை முன்னிட்டு வெளியிடப்பட்ட இதழ். இசுலாமிய வரலாற்றில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு புறப்பட்ட நிகழ்வே ஹிஜ்ரத் எனப்படுகின்றது. இந்த சம்பவம் இசுலாமிய புது வருடமாக கொள்ளப்படுகின்றது. ஹிஜ்ரி 1400ஐ முன்னிட்டு இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அரசுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. அதில் ஒரு திட்டமாகவே ஹிஜ்ரா சிற்றிதழும் அமைந்து காணப்பட்டது. இதில் ஹிஜ்ரா குறித்து பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=ஹிஜ்ரா_(சிற்றிதழ்)&oldid=14788" இருந்து மீள்விக்கப்பட்டது