ஹரா (திரைப்படம்)

ஹரா என்பது 2024இல் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். 16 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] இப்படத்தில் அனுமோள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 2024 சூன் 7 அன்று வெளியிடப்பட்டது.[2]

ஹரா (திரைப்படம்)
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்புகோவை எஸ்பி மோகன்ராஜ்
கதைவிஜய் ஸ்ரீ ஜி
இசைஇரசாந்த் அர்வின்
நடிப்புமோகன்
அனுமோள்
ஒளிப்பதிவுமனோ தினகரண்
பிராகத் முனுசாமி
படத்தொகுப்புகுணா
கலையகம்ஜெஎம் புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியீடு7 சூன் 2024 (2024-06-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இராம், நிலா இவர்களின் மகள் நிமிசா ஆகியோர் ஊட்டியில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதாக படம் தொடங்குகிறது. இராம் நிமிசா மீது ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர். கோயம்புத்தூரில் நிமிசா தற்கொலை செய்து கொண்டதாக இராம் செய்தி பெறும்போது இவர்களின் வாழ்க்கை பாழாகிவிடுகிறது. உண்மையை வெளிக்கொணர உறுதியாக இருக்கும் இராம், தாவூத் இப்ராஹிம் என்ற புனைப்பெயரை ஏற்றுக்கொண்டு, தனது மகளின் மரணத்திற்கான காரணங்களை விசாரிக்கிறார். இவரது விசாரணையில் மருத்துவ மாஃபியா, கட்டாய விபச்சார வளையம் உள்ளிட்ட பெரிய மோசடிகள் அம்பலமாகிறது. இதில் அரசாங்கத்திலும் காவல்துறையிலும் உள்ள சக்திவாய்ந்த நபர்கள் சிக்குறார்கள். இப்போது, இராம் அவர்களை பழிவாங்க விரும்புகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹரா_(திரைப்படம்)&oldid=32828" இருந்து மீள்விக்கப்பட்டது