ஸ்ரோரிவேவர்
ஸ்ரோரிவேவர் அல்லது கதைபின்னி என்பது சிறுவர் கதைகளை வாசிக்க, உருவாக்க, மொழிபெயர்ப்பதற்கான ஒரு பன்மொழித் தளம் ஆகும். இதன் உள்ளடக்கம் முற்று முழுதாக கட்டற்ற உரிமத்தில் (Creative Commons Attribution 4.0 Licence International (CC-BY-4.0)) வெளியிடப்படுகின்றது. இதில் நூறுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி நூல்களும் உள்ளன.
இந்தத் தளத்தினை இலாப நோக்கமற்ற பாந்தம் நூல்கள் பதிப்பகம் வெளியிடுகின்றது. இந்தத் தளத்துக்கு 2017 இக்கான காங்கிரசு நூலகத்தின் அனைத்துலக இலக்கிய விருது வழங்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ Geetika Mantri (ஒக்ரோபர் 2017). "Preserving languages, boosting literacy: B'luru NGO Pratham Books wins $50,000 prize". http://www.thenewsminute.com/article/preserving-languages-boosting-literacy-bluru-ngo-pratham-books-wins-50000-prize-67996. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2017.