ஸ்ரீராம் பாலாஜி

ஸ்ரீராம் பாலாஜி (Sriram Balaji, பிறப்பு 18 மார்ச் 1990) என்பவர் ஒரு இந்திய தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் 2024 சூன் 10 அன்று ஏடிபி இரட்டையர் உலக தரவரிசையில் 67 இடத்திலும், 2017 சூன் 19 அன்று ஒற்றையர் தரவரிசையில் உலகளவில் 287 இடத்திலும் உள்ளார்.

நா. ஸ்ரீராம் பாலாஜி
Balaji MLC21.jpg
2021 இன்டர்நேஷனக்ஸ் டி டென்னிஸ் டி வென்டீயில் பாலாஜி
முழுப் பெயர்ஸ்ரீராம் பாலாஜி நாராயணசாமி
நாடு இந்தியா
வாழ்விடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பிறப்பு18 மார்ச்சு 1990 (1990-03-18) (அகவை 34)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
உயரம்182செமீ
விளையாட்டுகள்வலக்கை
பரிசுப் பணம்$439,334
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்வார்ப்புரு:Tennis record
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைNo. 287 (19 சூன் 2017)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்வார்ப்புரு:Tennis record
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசைNo. 67 (10 சூன் 2024)
தற்போதைய தரவரிசைNo. 67 (10 சூன் 2024)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2023, 2024)
பிரெஞ்சு ஓப்பன்3R (2024)
விம்பிள்டன்2R (2018)
இற்றைப்படுத்தப்பட்டது: 25 மே 2024.

பாலாஜி ஃப்யூச்சர் சர்க்யூட்டில் மொத்தம் 9 ஐடிஎஃப் ஒற்றையர் பட்டங்களையும், சர்க்யூட்டில் 43 இரட்டையர் ஐடிஎஃப் ஃபியூச்சர்ஸ் மற்றும் 6 சேலஞ்சர் இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். இவர் தற்போது இந்திய டேவிஸ் கோப்பை அணியில் உள்ளார். இவர் 2017 மார்ச்சில் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து டேவிஸ் கோப்பைக்காக முதன் முதலில் விளையாடினார். 2017 மார்ச்சில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்று டேவிஸ் கோப்பை உலக பிளே ஆஃபில் நுழைந்தது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற ரோகன் போபண்ணா தன்னுடன் இணைந்து விளையாட ஸ்ரீராம் பாலாஜியைத் தேர்வு செய்துள்ளார். இதன் வழியாக 2024 பாரிஸ் ஒலிம்ப்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீராம் பாலாஜி விளையாடத் தேர்வாகியுள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் நாராயணசாமி, ஜெயந்தி இணையருக்கு மகனாக கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் தனது ஒன்பது வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். கோயம்புத்தூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பெர்க்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கோயம்புத்தூரில் உள்ள பெர்க்ஸ் டென்னிஸ் அகாதமியில் தனது டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தற்போது ஜெர்மனியில் உள்ள ஷுட்லர்-வாஸ்கே டென்னிஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகிறார். நீச்சலும், புத்தகங்களைப் படிப்பதும் இவரது பொழுதுபோக்குகளாகும். இவருக்கு பிடித்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். பாலாஜி தற்போது இந்தியத் தரைப்படையில் இளநிலை அதிகாரியாக உள்ளார். இவரது விளையாட்டு முயற்சிகளுக்கு தரைப்படை ஆதரவு அளித்துவருகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீராம்_பாலாஜி&oldid=28349" இருந்து மீள்விக்கப்பட்டது